தென் மாநிலங்களில் பாஜக செயல்பாடு எப்படி? லாபமா, நஷ்டமா? இதோ விவரம்
2024 லோக்சபா தேர்தலில், பாஜக 240 இடங்களை வென்றது. இருந்தபோதிலும், பாஜக தலைமையிலான NDA 293 இடங்களை பெற்றதால் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. அதேநேரம் தென் இந்தியாவில் பாஜக எப்படி பெர்பார்மன்ஸ் செய்துள்ளது. இதோ ஒரு ரவுண்ட்அப்.
தமிழகத்தில் நரேந்திர மோடி மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறைய முயற்சி செய்தாலும், பா.ஜ.க.வுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. வாக்கு சதவீதத்தில் அதிமுக 2வது இடத்திலும், பாஜக மற்றும் காங்கிரஸ் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. (south india bjp performance result for lok sabha election 2024)

கர்நாடகாவில் பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி 17 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஜேடிஎஸ் 2 இடங்களில் வெற்றி பெற்று, மாநிலத்தில் தங்கள் இருப்பை மீண்டும் நிலைநிறுத்தியது. ஆனால் கடந்த முறை பாஜக 26 தொகுதிகளில் வென்றிருந்தது. இப்போது கர்நாடகாவில் பாஜகவுக்கு இழப்பு. சித்தராமையா அரசின் இலவச திட்டங்கள் காங்கிரசுக்கு பலன் தந்துள்ளதாம்.தெலுங்கானாவில் பாஜகவுக்கு நல்ல லாபம். மொத்தமுள்ள 17 தொகுதிகளில், 8 தொகுதிகளை பாஜக வென்றது. கடந்த முறையை விட இரட்டிப்பு இடங்களை பாஜக வென்றுள்ளது. காங்கிரசும் 8தான் வெல்ல முடிந்துள்ளது.
கேரளாவில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றார், கட்சியின் வாக்கு சதவீதம் 3% இல் இருந்து 16% ஆக உயர்ந்துள்ளது. இடது முன்னணி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. அதாவது பாஜகவுக்கு ஈடாகதான் இடது கூட்டணி பெற்றது. மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பது அவசியம் என்ற எண்ணத்தில் கேரள மக்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமையிலான UDF 20 இடங்களில் 18 இடங்களைப் பெற்றது.
ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். புதுச்சேரியும் இந்தியா கூட்டணிக்கே போயுள்ளது. மொத்தத்தில் தென்னிந்தியாவில் பா.ஜ.க.வின் செயல்பாடு கலவையாக இருந்தது, சில மாநிலங்களில் வெற்றியும், சில மாநிலங்களில் பின்னடைவும் பெற்றுள்ளது.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications