கருணாநிதி பாணியில் அப்படி ஒரு பதில் சொன்ன அழகிரி.. சட்டென சிரித்துவிட்ட பெண் நிருபர்
Recommended Video

சென்னை: கருணாநிதி பாணியில் செய்தியாளர் கேள்விக்கு ஒரு நச் பதிலை அளித்து நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தினார், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
ஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு அழகிரி சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் ரொம்பவே ரிலாக்ஸ்சாக பதில் அளித்தார் அழிகரி.
தன்னை சேர்க்காவிட்டால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில், திமுக 4வது இடத்திற்குத்தான் செல்லும் என்று உறுதியாக தெரிவித்தார் அவர்.

இணைந்து பணியாற்ற ரெடி
அப்போது, கேள்வி கேட்ட பெண் நிருபர், ஸ்டாலினுடன், நீங்கள் இணைந்து பணியாற்ற தயாரா என்றார். அதற்கு அழகிரி, "ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் தயாராக இருப்பதால்தான் திமுகவில் சேர்த்துக்கொள்ள கேட்டுக்கொண்டேன். இதற்கு முன்பு எத்தனையோ முறை இருவரும், இணைந்து பணியாற்றி உள்ளோம்.

இடைத்தேர்தல்களில் ஸ்டாலின்
திருமங்கலம், திருச்செந்தூர், சங்கரன்கோவில், கம்பம், ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல்களில் ஸ்டாலினும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். என் தந்தை போட்டியிட்ட தேர்தலுக்காக கூட நான் பணியாற்றியுள்ளேன். என்னை திமுகவில் இணைத்துக்கொண்டால் திமுக வலிமை அடையும் என்றார் அழகிரி.

ரஜினிக்கு ஆதரவு
உங்கள் நண்பர் ரஜினிகாந்த் கட்சி துவங்க உள்ளாரே, அதற்கு திமுக தொண்டர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, "ரஜினிகாந்துக்கு அடிமட்ட மக்களிடையே பெரும் ஈர்ப்பு உள்ளது. ரஜினிக்கு எனது தந்தை மீது மிகுந்த பிரியம் எப்போதுமே உண்டு. அதே போல எனது தந்தைக்கும், ரஜினி மீது மிகுந்த அன்பு உண்டு. ரஜினியின் ரசிகர்கள் திமுகவில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கு போக வாய்ப்பு உள்ளது" என்றார் அழகிரி.

கலகல அழகிரி
அடுத்த கேள்வி பதில்தான் ஹைலைட். களத்தில் இப்போது தினகரன் உட்பட நிறைய பேர் உள்ளனர். இப்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? என்று நிருபர் கேள்வி கேட்டு முடிக்கும் முன்பாக, "யார் அதிக ஓட்டு வாங்குகிறார்களோ அவர்கள்தான் ஜெயிப்பார்கள்" என்றார் அழகிரி. இந்த எதிர்பாராத பதிலை கேட்டதும், பெண் நிருபரும் சிரித்துவிட்டார். இறுதியாக, ஏன் நான் ஜெயிப்பேன் என நினைக்க கூடாதா என சிரித்தபடியே கூறிக்கொண்டு பேட்டியை முடித்தார் அழகிரி. கருணாநிதியும் பிரஸ் மீட்டில் இப்படித்தான் நகைச்சுவையாக பதில் அளிப்பது வழக்கம். ஸ்டாலினிடம் அது மிஸ்சான நிலையில், அழகிரி தனது தந்தை பாணியில் பதிலளித்தது அவரது தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications