ஸ்டாலின் சரியான தலைவராக இருந்திருந்தால் ஆர்.கே.நகரில் டெபாசிட் போயிருக்காது.. அழகிரி அட்டாக்
Recommended Video

மதுரை: ஸ்டாலின் சரியான தலைவராக இருந்திருந்தால் ஆர்.கே நகரில் திமுகவுக்கு டெபாசிட் போயிருக்காது என்று மு.க. அழகிரி குற்றம்சாட்டினார்.
4 ஆண்டுகள் வாய் திறக்காமல் இருந்த அழகிரி, கருணாநிதி மறைவுக்கு பின்னர் பிஸியாகிவிட்டார். திமுகவுக்கு பெரும் குடைச்சலை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ரிபப்ளிக் வேர்ல்டு என்ற ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.

முத்துச்செல்வி
அவர் கூறுகையில் ஸ்டாலின் நல்ல தலைவரே அல்ல. அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்திருக்காது. தொண்டர்களே ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆர் கே நகரில் நடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற திமுக பெண் வேட்பாளர் சிம்லா முத்துச்செல்வி தோற்றாலும் 57 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.

வாக்கு வங்கி
ஆனால் தற்போது டெபாசிட் இழந்துள்ளது என்றால் அந்த வோட்டுகள் எல்லாம் எங்கு சென்றது. தற்போது திமுக பொருளாளராக உள்ள துரைமுருகனிடம் கட்சியின் வாக்கு வங்கிக்கு என்னவாயிற்று என கேட்டால் கட்சி தொண்டர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்குகளை விழுங்கி விட்டனர் என்றார். அவரை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை.

கட்சியில் எதிர்பார்ப்பு இல்லை
எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. கட்சியை அண்ணா துரை உருவாக்கினார். என் தந்தை அதை பாதுகாத்தார். அவர்கள் செய்த பணியை நான் செய்ய விரும்புகிறேன். இதை தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

எதையும் கேட்டதில்லை
என் தந்தை உயிருடன் இருந்த போது கூட நான் எந்த வித பதவியையும் எதிர்பார்க்கவில்லை. எனது சிறப்பான பணிகளை பார்த்துவிட்டு அவராகவே எனக்கு பதவிகளை அள்ளித் தந்தார். நான் அவரிடம் இதுவரை எதையும் கேட்டதில்லை என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications