கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு.. சாலை மார்க்கமாக சென்னை வருகிறார் அழகிரி!

கருணாநிதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து மதுரையில் இருந்து முக அழகிரி சாலை மார்க்கமாக புறப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து மதுரையில் இருந்து முக அழகிரி சாலை மார்க்கமாக புறப்பட்டுள்ளார்.

இன்று மாலை காவிரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றால் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

MK Azhagiri coming to Chennai to meet DMK leader Karunanidhi

அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் கருணாநிதி 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதியின் வீட்டிலேயே மருத்துவமனையில் உள்ள அளவுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு, யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து துணை முதல்வர், அமைச்சர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனால் தமிழக முழுவதும் பரபரப்பு தொற்றியது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்தனர். இந்நிலையில் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி கருணாநிதியை சந்திக்க சாலை மார்க்கமாக சென்னை வருகிறார்.

காலையில் அவர் கருணாநிதியை சந்திப்பார் என் தெரிகிறது. கருணாநிதியின் உடல் நிலை குறித்து பரவி வரும் தகவலால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+