கருணாநிதி பிறந்த நாளில் ரஜினியையும் சந்திக்கிறார் மு.க. அழகிரி?
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சென்னை வரும் முக அழகிரி நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியலைவிட்டே ஒதுங்கியிருக்கும் மு.க. அழகிரியும் ரஜினியை நேரில் சந்திக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.
திமுகவில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் அழகிரி. இது தொடர்பாக கருணாநிதியுடன் அவர் மல்லுக்கட்டியும் பார்த்தார்.

அரசியலில் இருந்து விலகல்
ஆனால் கடைசியில் திமுகவில் இருந்தே அதிரடியாக நீக்கப்பட்டார் அழகிரி. இதற்கு பின்னர் அழகிரி தீவிர அரசியலில் இருந்து அப்படியே ஒதுங்கியே இருக்கிறார்.

ரஜினி குறித்து ஆலோசனை
இந்நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பாக தமது ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின்போது, ரஜினி சொல்வதைப் போல சிஸ்டம் சரியில்லாமல்தானே இருக்கிறது என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் அழகிரி.

சென்னை வரும் அழகிரி
அதேநேரத்தில் அரசியலுக்கு வருவதாக கூறும் ரஜினிகாந்த், ஏன் திரும்பவும் படத்தில் நடிக்கிறார் எனவும் ஆதரவாளர்களிடம் கேள்வியும் எழுப்பியுள்ளார். இதனிடையே சென்னையில் ஜூன் 3-ந் தேதியன்று கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரை சந்திக்க சென்னை வருகிறார் அழகிரி.

ரஜினியை சந்திக்கிறார்?
அப்போது ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழகிரி பேச திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். திமுகவினரை முதலைகள் என ஏற்கனவே ரஜினிகாந்த் விமர்சித்திருந்தார். இந்நிலையில் அவரை அழகிரி நேரில் சந்திக்க போகிறார் என்கிற தகவல் திமுக வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications