தேமுதிகவில் சேர மு.க. அழகிரி ரெடியாம்... பார்த்தசாரதி 'சீரியஸ்' பேச்சு
சென்னை: தேமுதிகவில் சேர திமுக தலைவர் கருணாநிதி மகன் மு.க. அழகிரி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்த போதிருந்தே தேமுதிக கலகலக்க ஆரம்பித்தது. தேமுதிக மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் அதிமுக, திமுகவுக்கு தாவி வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிகவின் தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், தேமுதிகவில் இருந்து யார் வேண்டுமானாலும் போகட்டும். ஆனால், உண்மையான தொண்டர்கள் தொடர்ந்து இருப்பர்.

திமுகவில் விஜயகாந்த்?
5 முறை ஆட்சிக்கு வந்ததாக பேசிக் கொள்கிற திமுக, கீழ்த்தரமான வேலைபார்த்து எங்களது கட்சியைச் சேர்ந்தவர்களை இழுத்து வருகின்றனர். அத்துடன் பிரேமலதா சொன்னால் விஜயகாந்த் திமுகவில் சேருவார் என்றெல்லாம் கூறுகின்றனர்.

தேமுதிகவில் அழகிரி...
உண்மையில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிதான் தேமுதிகவில் சேருவதற்கு தயாராக இருக்கிறார். விஜயகாந்த் விஜயகாந்த் உத்தரவிட்டால் உடனடியாக அழகிரி சேருவார் என்றார்.

விஜயகாந்தை எதிர்த்த அழகிரி
கடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிகவை திமுக கூட்டணிக்கு கொண்டு வருவதில் மு.க.ஸ்டாலின் மும்முரமாக இருந்தார். விஜயகாந்தும் திமுக அணிக்கு வருவதற்கு சிக்னல் கொடுத்திருந்தார். ஆனால் அப்போது விஜயகாந்தை கடுமையாக மு.க. அழகிரி விமர்சித்திருந்தார்.

பார்த்தா சீரியஸ் பேச்சு
இதனால் தேமுதிக- திமுக கூட்டணி உருவாகவில்லை. இதனைத் தொடர்ந்தே அழகிரி ஓரங்கட்டப்பட்டு திமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த நிலையில் தேமுதிக தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி, தேமுதிகவில் மு.க. அழகிரி சேருவார் என சீரியசாகவே கூறிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications