திமுகவுக்கு திரும்புகிறார் முக அழகிரி? தடபுடலாக பிறந்த நாள் கொண்டாட ரெடியாகும் ஆதரவாளர்கள்!

முக அழகிரி மீண்டும் திமுகவில் சேர்க்கப்படக் கூடும் என தெரிகிறது. அவரது பிறந்த நாளை கொண்டாட ஆதரவாளர்கள் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை தொடர்ந்து சந்தித்து வரும் மு.க. அழகிரி மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டு தென்மண்டல அமைப்புச் செயலராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து ஜனவரி 30-ந் தேதி அழகிரியின் பிறந்த நாளை தடபுடலாக கொண்டாட இப்போதே அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.

திமுகவில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் அழகிரி. இதையடுத்து அவர் தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியை சந்திக்காமலேயே இருந்து வந்தார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு போனாலும் தாயார் தயாளு அம்மாளை மட்டுமே அழகிரி சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் முதுமை காரணமாக கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

கருணாநிதி, ஸ்டாலினுடன் சந்திப்பு

கருணாநிதி, ஸ்டாலினுடன் சந்திப்பு

இதனால் கோபாலபுரம் இல்லம் சென்ற அழகிரி அங்கு கருணாநிதியை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அடிக்கடி கருணாநிதியை சந்தித்து அழகிரி பேசினார். ஒருகட்டத்தில் மு.க.ஸ்டாலினுடனும் அழகிரி ஆலோசனை நடத்தினார்.

செயல்தலைவராகும் ஸ்டாலின்

செயல்தலைவராகும் ஸ்டாலின்

இதனிடையே வரும் 20-ந் தேதி திமுகவின் பொதுக்குழு சென்னையில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் திமுகவின் செயல் தலைவர் அல்லது துணைத் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. அதேபோல் ஸ்டாலின் வசம் உள்ள திமுக பொருளாளர் பதவி முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு அல்லது திண்டுக்கல் ஐ. பெரியசாமிக்கு கொடுக்கப்படக் கூடும் என தெரிகிறது.

மீண்டும் அழகிரி

மீண்டும் அழகிரி

ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படும் நிலையில் அதற்கு எதிர்ப்பு வரக்கூடாது என்பதற்காக அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்த்து கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலர் பதவியை திரும்ப கொடுக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது அழகிரியின் ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிறந்தநாள்..

இதன்வெளிப்பாடாக அழகிரியின் பிறந்த நாளான ஜனவரி 30-ந் தேதியை தடபுடலாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர். இப்பொழுதே சுவரெழுத்துப் பணிகளை தொடங்கியும்விட்டனர் அழகிரி ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+