திட்டமிட்டபடி 16-ந் தேதி அமெரிக்கா போகிறார் அழகிரி?
மதுரை: திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்ட மு.க. அழகிரி வரும் 16-ந் தேதியன்று திட்டமிட்டபடி அமெரிக்கா செல்வாரா? அல்லது மதுரையில் கருணாநிதியை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்துவாரா? என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டார் மு.க. அழகிரி. ஆனாலும் நான் திமுக காரன்.. எனக்கு எப்போதுமே கருணாநிதிதான் தலைவர் என்று அதிரடி பேட்டிக் கொடுத்து வருகிறார் மு.க. அழகிரி.

அத்துடன் மதுரைக்கு வரும் கருணாநிதியை நான் சந்திப்பேன்..அப்போது அவரையே கட்சியை விட்டு நீக்கினாலும் நீக்கிவிடுவார்கள் என்றும் அழகிரி கூறினார். இதனிடையே மு.க. அழகிரியை பேசாமல் அமெரிக்காவுக்குப் போய் விடச் சொல்லுங்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியும் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
சமரச முயற்சி?
இந்த நிலையில் தயாளு அம்மாளையும் ராஜாத்தி மற்றும் கனிமொழியையும் அழகிரி சந்தித்துப் பேசினார். ஆனால் மு.க. அழகிரியுடன் எந்த ஒரு சமாதானத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்பதில் மு.க. ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம்.
லண்டனுக்குப் போவேன்
அப்படி ஏதாவது மு.க. அழகிரியுடன் மீண்டும் இணக்கமாக சமாதானத்தை உருவாக்க நினைத்தால் தாம் மருத்துவ பரிசோதனைக்காகவும் ஓய்வெடுக்கவும் லண்டனுக்குப் போய்விடுவேன் என்று ஸ்டாலின் தன் பங்குக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
செல்வி தூது?
வழக்கமாக கருணாநிதி குடும்ப பிரச்சனைகளில் தூதராக செயல்படும் கருணாநிதியின் மகள் செல்வி இம்முறை அத்தகைய முயற்சி எதனையும் மேற்கொள்ளவும் இல்லை. இதற்கு காரணமும் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்காவின் கடுமைதான் எனக் கூறப்படுகிறது.
ஓங்கும் ஸ்டாலின் கை
தற்போதைய நிலையில் திமுகவில் கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலின் ஆதிக்கமே இருக்கிறது. இது அப்படியே நீடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் மிக உறுதியாக இருந்து 'செக்' வைத்துக் கொண்டே இருக்கின்றராம்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications