வெயிட்டிங் பார் 'டைமிங்'... 'திரும்பவும் வந்துட்டேன்னு' சொல்வார்...போட்டு தாக்கும் அழகிரி கோஷ்டி
தீவிர அரசியலுக்கு முக அழகிரி திரும்பவும் வருவார்..அப்போதுதான் அவரது வலிமை தெரியவரும் என ஆதரவாளர்கள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அரசியலை விட்டு முக அழகிரி ஒதுங்கவில்லை... திரும்பவும் வந்துட்டேன்னு அவர் சொல்கிற காலம் நிச்சயம் வரும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
திமுகவில் தலைமை பதவிக்கான அதிகாரப் போட்டியில் ஸ்டாலினும் அழகிரியும் முட்டி மோதினர். இதில் மூத்தவரான மு.க. அழகிரி, கட்சியில் இருந்து நீக்கப்படும் நிலை உருவானது.

நோ கமெண்ட்ஸ்
இதற்கு பின்னர் அரசியலைப் பற்றி எந்த ஒரு கருத்துமே தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தந்தை கருணாநிதியையும் அவரது தாயார் தயாளு அம்மாளையும் மட்டும் கோபாலபுரம் இல்லத்தில் அவ்வப்போது சந்தித்து விட்டு அமைதியாக செல்கிறார் அழகிரி.

காலம் வரும்
அழகிரியின் நடவடிக்கைகள் தொடர்பாக அவரது ஆதரவு கோஷ்டியிடம் கேட்டபோது, நாங்க எல்லாவற்றையும் பார்த்துகிட்டேதான் இருக்கோம்.. எங்களுக்கும் ஒரு காலம் வரும்... நிச்சயம் வரும்.. அப்ப நாங்க யாருன்னு காட்டுவோம் என்கின்றனர்.

தொந்தரவு செய்யக் கூடாது...
அழகிரியைப் பொறுத்தவரையில் கருணாநிதி உடல்நலம் இல்லாமல் ஓய்வெடுத்து வரும் நிலையில் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைக்கிறார். அதனாலேயே எந்த ஒரு கருத்தையும் அழகிரி தெரிவிக்காமல் இருந்து வருகிறார் என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

வைரவிழா
அதேபோல் கருணாநிதியின் வைரவிழா என்பது அரசியல் ரீதியாக திமுக நடத்தக் கூடிய நிகழ்ச்சி. நிச்சயம் எங்களை அழைக்கவும் மாட்டார்கள்...அந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் போகவும் மாட்டோம்.. போய் அவமானப்படுவதற்கு அமைதியாக இருப்போம் எனவும் கோட்டிட்டு காட்டுகின்றனர்.
-
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications