என் ஆதங்கத்தை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொட்டுவேன்- முக அழகிரி
என் ஆதங்கத்தை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் சொல்கிறேன் என்று மு.க. அழகிரி தெரிவித்தார்.
சென்னை: என் ஆதங்கத்தை இன்னும் 3 நாட்களுக்குள் செய்தியாளர்களிடம் கூறுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தெரிவித்தார்.
திமுகவில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பதவி இல்லை என்றும் தனக்கு முக்கிய பதவி இல்லை என்றும் ஒரு புயலை கிளப்பியதால் திமுகவிலிருந்து மு.க.அழகிரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டார்.
அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் முயன்றும் அது முடியவில்லை.

சென்னை வந்தார்
அவ்வப்போது கட்சி குறித்து பேசி வந்த அழகிரி கடந்த சில மாதங்களாக திமுக குறித்து பேசாமல் இருந்தார். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை பாதிப்பு குறித்து அறிந்த அவர் தனது குடும்பத்தினருடன் இந்த மாத தொடக்கத்தில் சென்னை வந்தார்.

மெரினாவுக்கு வந்தார்
அப்போது அவரும் , ஸ்டாலினும், கனிமொழியும் ஒற்றுமையுடன் இருந்ததாகவே தெரிகிறது. இந்நிலையில் கருணாநிதி கடந்த 7 -ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து இன்று தனது குடும்பத்தினருடன் மெரினாவுக்கு வந்தார் அழகிரி.

அவசர கூட்டம்
அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் எனது ஆதங்கத்தை என் அப்பாவிடம் கூற வந்துள்ளேன். அது கட்சி ரீதியிலான ஆதங்கம். இப்போது அது தெரியாது. பிறகு கூறுவேன். கட்சியினர் என் பக்கம்தான் உள்ளனர் என்றார். நாளை திமுக சார்பில் அவசர கூட்டம் நடைபெறும் நிலையில் அழகிரி தனக்கும் ஆதரவாளர்கள் இருப்பது குறித்து தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கட்சியில் சேர்க்க மாட்டோம்
அழகிரியின் பேட்டி குறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கூறுகையில் எந்த நெருக்கடி, யாரிடம் இருந்து வந்தாலும் சரி அழகிரிக்கு பதவி இல்லை. எக்காரணம் கொண்டும் அவரை தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

2 அல்லது 3 நாளில்...
இதையடுத்து கோபாலபுரத்துக்கு சென்றார் அழகிரி. அப்போது கட்சியில் பிளவு தொடங்கிவிட்டதா என்ற கேள்விக்கு அழகிரி கூறுகையில் நான் கட்சியில் இல்லை என்றார். மேலும் கட்சி ரீதியான ஆதங்கம் என்ன என கேட்டதற்கு பொறுங்கள் இப்போது சொல்ல முடியாது, நான் 2 அல்லது 3 நாட்களில் தெரிவிக்கிறேன் என்று கூறினார். கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலினும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications