டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக நலன்களை முன்வைக்காத எடப்பாடிக்கு ஸ்டாலின் கண்டனம்!
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக நலன்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக நலன்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதுவுமே பேசவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் பேசவில்லை. வங்கிக்கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றோ வறட்சி நிவாரணத்துக்கு தமிழக அரசு கோரி நிதி முழுவதையும் தர வேண்டும் என்றோ பிரதமர் மோடிக்கு முதல்வர் அழுத்தம் தரவில்லை.

மேலும் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்டவை தமிழக நீர்ப்பாசனம் பாதிக்கும வகையில் தடுப்பணை கட்டுவது குறித்தோ, அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்ற என்ன நடவடிக்கை என்பது குறித்தோ மத்திய அரசின் கவனத்திற்கு முதலமைச்சர் எடுத்துச் செல்லவில்லை. தமிழகத்தை அதிமுக அரசு கடன்சுமையில் தள்ளியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த கடன் சுமையை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் நடவடிக்கைகளை கோரும் முயற்சிகளை முதல்வர் எடுக்கவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications