18ல் சென்னையில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் மு.க. ஸ்டாலின்
சென்னை: வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
அனைத்து திருச்சபைகளும் கலந்து கொள்ளும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா வரும் 18ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறுகிறது.
சீரோ மலபார் திருச்சபை முதன்மை பேராயர் கார்டினல் ஜார்ஜ் ஆலென்சேரி தலைமையில் நடக்கும் இந்த விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.

விழாவில் அருட் சகோதரர் பேட்ரிக், சகோதரி சாராள் நவரோஜி, குழந்தை பிரான்சிஸ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
விழாவில் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் மேயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா, இந்தியன் மலங்கரா ஆர்த்தடாக்ஸ் திருச்சபை பேராயர் டாக்டர் யோகனன் மார்டியோஸ் கோரோஸ், ஈ.சி.ஐ. திருச்சபை பிரதம பேராயர் எஸ்றா சற்குணம், பெந்தகோஸ்ட் திருச்சபை பெருளாளர் டாக்டர் எடிசன், ஆங்கிலிக்கன் திருச்சபை துணை பிரதம பேராயர் ஜான் சத்தியகுமார், தமிழ்நாடு ஆந்திரா இரட்சண்ய சேனை மாகாண தளபதி இம்மானுவேல், சி.எஸ்.ஐ. திருச்சபை துணை பேராயர் முத்தையா தேவநேசன், அருட் சகோதரி கில்பர்ட்டா, டாக்டர் பால்ரெங்கநாதன், ஆண்ட்ரூ பி.நடராஜன், டாக்டர் எலிசபெத் வர்கீஸ் ஆகியோர் உரை நிகழ்த்துகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications