ஏற்காட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு தீயா வாக்கு சேகரிக்கும் மு.க. ஸ்டாலின்

ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தொகுயில் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஏற்காடு தொகுதியில் இன்று முதல் 4 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு பிரச்சாரத்தை துவங்கும் அவர் முதலில் கக்கன் காலனியில் வாக்கு சேகரிக்கிறார். பின்னர் உடையாப்பட்டி, அதிகாரிப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டணம் (ஆத்தூர் பேருந்து நிறுத்தம்), ராமர்கோவில், மேட்டுப்பட்டி தாதனூர், தேவாங்கர் காலனி, குள்ளம்பட்டி, பாலாஜி காலனி, சந்தியா காலனி, கருமாபுரம் ஆகிய இடங்களில் இரவு 9.45 மணி வரை பிரச்சாரம் செய்கிறார். இத்துடன் இன்றைய பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறார்.
நாளை மாலை 4 மணிக்கு ராமலிங்கபுரத்தில் 2வது நாள் பிரச்சாரத்தை துவங்கும் அவர் தொடர்ந்து வெள்ளாளகுண்டம் பிரிவு, சேசன்சாவடி, முத்தம்பட்டி, சிங்கிபுரம் காலனி, பழனியாபுரம், பொன்னாரம்பட்டி, சிங்கிபுரம், சோமம்பட்டி, விலாரிபாளையம், மன்னார்பாளையம், வே.புதூர், குமாரபாளையம், திருமனூர், வேப்பிலைப்பட்டி, வெள்ளாளகுண்டம், சேத்துக்குட்டை, காரிப்பட்டி, சின்னகவுண்டாபுரம், பெரிய கவுண்டாபுரம், ராம்நகர் ஆகிய இடங்களில் மாறனுக்காக வாக்கு சேகரிக்கிறார்.
இதையடுத்து டிசம்பர் 1ம் தேதி காலை 10 மணிக்கு ஏற்காடு டவுனில் தனது பிரச்சாரத்தை துவங்கும் அவர் வேலூர் (நடூர்), நாகலூர், செம்மநத்தம், பிலியூர், மஞ்சக்குட்டை, செங்காடு, கீரக்காடு (வாழவந்தி), மாரமங்கலம், கொட்டச்சேடு (நார்த்தச்சேடு), குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, பருத்திக்காடு (பூவனூர்), சுக்கம்பட்டி (பேருந்து நிறுத்தம்), வலசையூர், பள்ளிப்பட்டி, தைலானூர் (பேருந்து நிறுத்தம்), சின்னனூர், வீராணம், சின்ன வீராணம், கத்தாளப்பாடி, டி.பெருமாபாளையத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
டிசம்பர் 2ம் தேதி இறுதி நாள் பிரச்சாரத்தை காலை 9 மணிக்கு துவங்குகிறார் ஸ்டாலின். அவர் கோலாத்துகோம்பையில் துவங்கி நீர்முள்ளிக் குட்டை, பள்ளத்தாதனூர், சி.என்.பாளையம், சந்திரபிள்ளைவலசு, குறிச்சி, புழுதிகுட்டை, தும்பல், பாப்பநாயக்கன்பட்டி, கருமந்துறை, பேளுர், அத்தனூர்பட்டி, துக்கியாம்பாளையம், வாழப்பாடி, வாழப்பாடி பேரூரில் பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications