உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் படுகொலைக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் எழுதியுள்ளதாவது:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு மோசமாகி விட்டது என்பதன் உச்சகட்ட கொடூரம்தான், மார்ச் 13ந் தேதியன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடுரோட்டில் நடந்த கொலை சம்பவமாகும்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் சங்கர் உடுமலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுசல்யா "தங்கள் உயிருக்கு ஆபத்து" என்று பல கட்டங்களில் புகார் அளித்தும் காவல்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்று வெளிவந்துள்ள செய்தி கவலையளிக்கிறது.
அனைத்து தரப்பு மக்களிடமும் நல்லிணக்கம் நிலவ திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. சமூக நல்லிணக்கத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் கழக ஆட்சியில்தான் தொடங்கி வைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் முடக்கிய ஜெயலலிதா அரசு, கடந்த 5 ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கை மாநிலத்தில் சந்தி சிரிக்க வைத்து விட்டது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்றவை அதிகரித்து கொண்டேயிருக்கின்றன. காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா இது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், டாஸ்மாக் கடைகளுக்கும் தன்னுடைய படம் போட்ட பேனர்களுக்கும் போலீசாரை பாதுகாப்பாக நிறுத்தியிருக்கிறாரே தவிர, மாநிலத்தில் அமைதியான சூழல் ஏற்படுவதற்கு காவல்துறையைப் பயன்படுத்தவில்லை.
குறிப்பாக தென்னிந்திய "மான்செஸ்டர்" என்று அழைக்கப்படும் கோவை மண்டலத்தில் வன்முறை கலாச்சாரமும், துப்பாக்கி கலாச்சாரமும் சமீப காலமாக தலை தூக்கியிருப்பதற்கு செயலற்ற அதிமுக ஆட்சியே காரணம். தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா, அந்த காவல்துறையை வழிநடத்தும் ஒரு ஆட்சி தமிழகத்தில் இருக்கிறதா என்ற கேள்வி எழுவது மட்டுமின்றி, "பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறோம்" என்ற பயத்தையும், பீதியையும் மக்கள் மத்தியில் இந்த ஐந்தாண்டு அதிமுக ஆட்சி ஏற்படுத்தியிருப்பது வேதனைக்குரியது.
தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், அனைத்து தரப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இனியாவது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications