எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ங்க- மு.க.ஸ்டாலின் டிமான்ட்
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
Recommended Video

சென்னை: பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறும் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக்கு சட்டசபை தேர்தலில் மக்கள் முடிவு கட்டினர். அதற்கு பதில் பாஜகவை தேர்வு செய்தனர்.
இந்நிலையில் திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதால் அங்குள்ள லெனின் சிலை இன்று அகற்றப்பட்டது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

பெரியார் குறித்து டுவீட்
இந்நிலையில் பெரியார் சிலை அகற்றுவது குறித்து எச்.ராஜா ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில் லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை , நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமியின் சிலை என்று கூறியுள்ளார்.

வலுக்கும் கண்டனங்கள்
எச்.ராஜாவின் இந்த டுவீட்டுக்கு கி.வீரமணி, சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி வருகின்றனர்.

குண்டாஸ் சட்டம்
இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில் ஹெச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் அடிக்கடி பேசுகிறார், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

கூட்டம் கூட்ட
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக என்னுடன் ஓபிஎஸ் நேற்று பேசினார். மார்ச் 9-ஆம் தேதி மத்திய அரசின் கூட்டத்திற்கு பிறகு பேரவையை கூட்டலாமா என்றார். அது காலத்தை நீட்டிக்கும் செயல் என்பதால் முன்கூட்டியே சட்டசபையை கூட்ட வேண்டும் என்றேன் என்றார் ஸ்டாலின்

ரஜினிக்கு பதிலடி
மேலும் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினி நேற்று ஒரு விழாவில் கூறியிருந்தார். அதற்கு ஸ்டாலின் தமிழகத்தில் வெற்றிடம் ஏதும் இல்லை என்றார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications