தமிழக மக்களின் நீர் தேவையை கருத்தில் கொண்டு கேரளாவுக்கு நீர் திறக்கக் கூடாது- ஸ்டாலின் கோரிக்கை
தமிழக மக்களின் நீர் தேவையை கருத்தில் கொண்டு கேரளாவுக்கு நீர் திறக்க கூடாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழக மக்களின் நீர் தேவையை கருத்தில் கொண்டு கேரளாவுக்கு நீர் திறக்க கூடாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள அரசின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆழியாறு அணையிலும் போதிய நீர் இல்லை. அப்படியிருக்கும்போது கேரளாவுக்கு தண்ணீர் கொடுப்பதாக இங்கு கடும் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது.

தமிழக மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்துவிட்டு பின்னர் கேரள அரசுக்கு தண்ணீர் திறந்துவிட்டிருக்கலாம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் கோவை, திருப்பூர் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதை தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டித்த வண்ணம் உள்ளனர். கேரளாவுக்கு நீர் திறந்து விடக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில் பரம்பிகுளம்- ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறப்பதை நிறுத்த வேண்டும். கோவை, திருப்பூர் மகக்களின் நீர் தேவையை கருத்தில் கொண்டு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரள பாசன தேவைக்கு மாற்று வசதிகள் இருக்கும் ஆழியாறு நீரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications