கருணாநிதியின் "சகா" சங்கரய்யாவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின்
கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவை சந்தித்து ஆசி பெற்றார் ஸ்டாலின்.
Recommended Video

சென்னை: பதவியேற்ற முதல்நாளே மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவை நேரில் சந்தித்து ஆசி பெற்று வந்திருக்கிறார்கள் திமுக தலைவர் ஸ்டாலினும், பொருளாளர் துரைமுருகனும்!
முதலில் செய்திக்குள் போவதற்கு முன்பு, சங்சரய்யா என்பவர் யார்? ஸ்டாலினும், துரைமுருகனும் பணிகளை விட்டுவிட்டு, நேரில் சென்று வாழ்த்தையும், ஆசிகளையும் வாங்கி கொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இவர் யார்? என்பதை இளைய தலைமுறைகள் அறிந்து கொள்வது அவசியம்.

யார் இந்த சங்கரய்யா?
இந்தி திணிப்பு போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டங்களில் பங்கேற்றவர் சங்கரய்யா... அடக்குமுறைகளின் தடியடிக்கு ஆளானவர்.. 8 வருடங்கள் சிறை வாழ்க்கை.. தலைமறைவு இன்னல்கள்... இதற்காக தன்னுடைய வழக்கறிஞர் ஆகும் ஆசையையே பறிகொடுத்தவர்தான் சங்கரய்யா! மிகச்சிறந்த இலக்கியவாதியாக இருந்து ஜனசக்தி, தீக்கதிர் போன்றவற்றின் ஆசிரியராக இருந்தவர்!

நேரில் வரமுடியவில்லை
இவருக்கும் கருணாநிதிக்குமான நட்பு மிக ஆழமானது! திமுக கூட்டணிக்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இவர்களின் நட்பு இன்னும் ஆழத்துடன் ஊன்றப்பட்டே வந்தது. இப்போது இவருக்கு வயது 96. கருணாநிதி உயிரிழந்ததை சங்கரய்யாவால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. உடல்நிலை மிகவும் நலிவுற்று இருக்கும் சங்கரய்யாவால் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த நேரிலும் வரமுடியவில்லை.

போய் வா... போய் வா..
ஆனாலும் வீட்டில் இருந்து கொண்டு, சங்கரய்யா கருணாநிதியின் இறுதிஊர்வலத்தை டிவியில் பார்த்தார். அப்போது சங்கரய்யா, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, முகமெல்லாம் சோகம் வடிந்து நின்றது. கண்களிலிருந்து சங்கரய்யாவுக்கு தண்ணீர் வழிந்தோடி வந்தது. அதனை தன் கைகளால் துடைத்துக் கொண்டே இருந்தார். பிறகு இறுதி ஊர்வலத்தை பார்த்த சங்கரய்யா, "போய் வா... போய் வா" என்பது போல தன் கைகளை உயர்த்தி உயர்த்தி காட்டிய உணர்ச்சி பெருக்கெடுக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது.

நேரில் ஆசி
கருணாநிதி மீது இவ்வளவு அன்பும், நெருக்கமும், பாசமும், தோழமையும் மிகுந்த சங்கரய்யாவைத் தான் இன்று திமுக தலைவர் ஸ்டாலினும், பொருளாளர் துரைமுருகனும் நேரில் சென்று சந்திருக்கிறார்கள். தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று காலை குரோம்பேட்டையில் உள்ள மூத்த கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யா வீட்டுக்கு சென்றார்.

கூடியுள்ள மரியாதை உணர்வு
அங்கு சென்ற ஸ்டாலினும், துரைமுருகனும் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டதுடன், சங்கரய்யாவின் உடல் நலம் குறித்தும் இருவரும் விசாரித்தனர். தன் தந்தையின் நண்பர்தானே என்றில்லாமல், சங்கரய்யாவின் வயதுக்கும், தியாகத்துக்கும், தந்தையின் மீது வைத்த ஆழமான நட்புக்கும் மதிப்பளித்து அவரிடம் ஆசி பெற்று வந்த செயல், ஸ்டாலின் மீது மற்றொரு மரியாதை உணர்வை கூட்டியுள்ளது!
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications