திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு... பொதுக்குழுவில் அறிவிப்பு
Recommended Video

திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு... பொதுக்குழுவில் அறிவிப்பு
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவுகளால் மறைந்தார். இதையடுத்து அவரது பதவியில் ஸ்டாலினை அமர்த்துவது என்று மூத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதுபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகனை நியமிப்பது என்றும் முடிவு செய்தனர்.

இந்த பதவிக்கான தேர்தல் 28-ஆம் தேதி நடைபெறும் என்றும் அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்நிலையில் தலைவர் பதவிக்கு ஸ்டாலின் மற்றும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் ஆகியோரை தவிர வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை. மேலும் வேட்புமனுக்களை வாபஸ் செய்ய நேற்றைய தினம் கடைசி நாள் என்ற நிலையில் ஸ்டாலினும் துரைமுருகனும் தனது வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை.
இதனால் அவர்கள் போட்டியின்றி அவரவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அறிவித்தார். இந்நிலையில் இன்றைய தினம் பொதுக் குழு அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணிக்கு கூடியது. கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஸ்டாலின் தலைவராகவுள்ளதைக் காண் திமுகவினர் குவிந்துள்ளனர். பொதுக்குழு நடைபெறும் கலைஞர் அரங்கத்திற்குள் கூட்டம் பெருமளவில் உள்ளது. வெளியிலும் நூற்றுக்கணக்கானோர் கூடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications