திமுக தலைவரானார் ஸ்டாலின் : சந்திராஷ்டம நாளில் மூட நம்பிக்கையை தகர்த்து பதவியேற்பு
தேய்பிறை செவ்வாய்கிழமை, சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ள நாளில் மரண யோகத்தில் திமுக தலைவராக ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார்.
Recommended Video

சென்னை: தளபதியாக இருந்த ஸ்டாலின் இன்று முதல் திமுக தலைவராக பொறுப்பேற்கிறார். சிம்ம ராசி, பூரம் நட்சத்திரக்காரரான ஸ்டாலினுக்கு இன்று சந்திராஷ்டமம். நல்ல காரியங்கள் எதுவும் இன்று செய்யக்கூடாது என்றாலும் மூட நம்பிக்கையை தகர்த்தெரிந்து திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரானார் மு.க.ஸ்டாலின்.
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுகவை நிறுவியவ சி.என். அண்ணாதுரை தனது அரசியல் ஆசான் பெரியாருக்காக திமுக தலைவர் பதவியை காலியாக விட்டு வைத்திருந்தார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தலைவரானர் மு.கருணாநிதி. கடந்த 50 ஆண்டு காலமாக கருணாநிதி திமுக தலைவராக இருந்தார். தனது அரசியல் வாரிசாக ஸ்டாலினை ஏற்கனவே அறிவித்திருந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி என்பதால் இளைஞரணியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஸ்டாலின். தனது 14 வயது முதல் அப்பாவிடமே அரசியல் பயின்ற ஸ்டாலின் பொருளாளார், செயல் தலைவர் என திமுகவின் கட்சிப் பதவிகளை அலங்கரித்தார்.

ஸ்டாலின் வகித்த பதவிகள்
இரண்டு முறை சென்னை மேயர், உள்துறை அமைச்சர், துணை முதல்வர் எனப் பல பொறுப்புகளில் இருந்த அனுபவம் கொண்டவர் ஸ்டாலின். கட்சிப்பதவிகளிலும் தொண்டர்களை கட்டுப்கோப்பாக வைத்திருந்தார். கருணாநிதிக்கு எத்தனையோ வாரிசுகள் குடும்பத்தில் இருந்தாலும் ஆரம்பம் முதலே தனது அரசியல் வாரிசாக வார்த்தெடுத்தவர் ஸ்டாலின்தான்.

தலைவராக ஏற்க மறுப்பு
முன்னாள் மத்திய அமைச்சரும் ஸ்டாலினின் அண்ணனுமான அழகிரியின் உருட்டல் மிரட்டல் கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. கருணாநிதியைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று தொடக்கம் முதலே கூறி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே கருணாநிதி உடல் நலக்குறைவினால் பாதிக்கப்படவே, செயல்தலைவரானர் ஸ்டாலின். கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு அழகிரியின் மிரட்டல் அதிகமாகவே உள்ளது. ஆனாலும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஸ்டாலின் பக்கமே இருக்கின்றனர்.

ஏகமனதாக ஸ்டாலின் தேர்வு
என்னைக் கட்சியில் சேர்த்துக்கொள்ளாவிட்டால் கடும் பின்விளைவுகளைச் சந்திக்கவேண்டும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதைப்பற்றி எல்லாம் ஸ்டாலினும் திமுகவினரும் கவலைப்படவில்லை. தலைவர் பதவிக்கு 26ஆம் தேதியன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஸ்டாலினுக்கு போட்டியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஸ்டாலின்.1967 ஆம் ஆண்டு 14 வயதில் மாணவர் பருவத்தில் திமுகவில் பயணத்தை தொடங்கிய மு.க. ஸ்டாலின் 51 ஆம் ஆண்டு அரசியல் வாழ்வில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சந்திராஷ்டம தினத்தில் பதவியேற்பு
ஆகஸ்ட் 28,2018 திமுக வரலாற்றில் மிக முக்கியமான நாள். தேய்பிறை செவ்வாய்கிழமை தினமான இன்று முழுவதும் மரணயோகம். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. நல்ல காரியங்கள் செய்வதற்கு இன்று நல்ல நாள் இல்லை என்று ஜோதிடப்படி சொல்வார்கள். ஆனால் மூட நம்பிக்கைகளை முறியடித்து தலைவராக இன்று பதவியேற்றார் ஸ்டாலின். அவர் தலைவராக அறிவிக்கப்பட்ட போது எமகண்ட நேரம் முடிந்து விட்டது. தங்களின் தளபதி தலைவராக பதவியேற்றதை தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications