தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர்... கருணாநிதியைவிட ஸ்டாலினுக்கே அதிக ஆதரவு- ஜூ.வி சர்வே!
சென்னை: தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கருணாநிதியைவிட அவரது மகனும் கட்சி பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கே அதிக ஆதரவு உள்ளதாக ஜூனியர் விகடன் சர்வே தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏடு தொடர்ச்சியாக பல்வேறு தலைப்புகளில் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த இதழில் எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாடு எப்படி என கருத்துக் கணிப்பு நடத்தியிருந்தது.
அதில் விஜயகாந்த் செயல்பாடுகள் சூப்பர் என வெறும் 10% பேர்தான் ஆதரவு தெரிவித்திருந்தனர். பெரும்பான்மையானோர் விஜயகாந்த் செயல்பாடு படுமோசம் என கூறியிருந்தனர். அதற்கு முன்னர் ஜெயலலிதா அரசின் செயல்பாடு குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டிருந்தது. அதில் ஜெயலலிதா அரசின் செயல்பாடு படுமோசம் என பெரும்பான்மையானோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக யாருக்கு உங்கள் ஆதரவு என்ற கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது. மொத்தம் 16,846 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு 39%
இதில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு 39.40% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதவது 6,637 பேர் மட்டும் முதலமைச்சர் வேட்பாளராக கருணாநிதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலினுக்க் 61%
ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு 60.60% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் 10,209 பேர் ஸ்டாலினுக்கு ஆதரவை தெரிவித்திருக்கின்றனர் என்கிறது ஜூ.வி. சர்வே.

ஸ்டாலினை ஆதரிக்கும் மதுரை
இதில் மதுரை மண்டலத்தில்தான் மு.க.ஸ்டாலினுக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. அம்மண்டலத்தில் 3,626 பேர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மதுரைக்கு அடுத்து சென்னை மண்டலத்தில் 3,206 பேர் ஸ்டாலினை ஆதரிக்கின்றனர்.

சென்னை, மதுரையில் கருணாநிதிக்கு...
கருணாநிதிக்கு சென்னை மண்டலத்தில் 2,148 பேர், மதுரை மண்டலத்தில் 2,060 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்கிறது ஜூ.வி. சர்வே.

"நமக்கு நாமே"க்கு நல்ல வரவேற்பு
மேலும் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் பொதுமக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்கிறது ஜூ.வி. சர்வே டீம். அத்துடன் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை அறிவித்தால் என்ன என்கிற கேள்வியையும் தங்களிடம் பொதுமக்கள் பலரும் எழுப்பினார்கள் என்கிறது ஜூ.வி. சர்வே டீம்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications