அன்னையர் தினத்தில் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்ற ஸ்டாலின்
அன்னையர் தினத்தில் தயாளு அம்மாளை சந்தித்து ஸ்டாலின் ஆசி பெற்றார்.
சென்னை: அன்னையர் தினத்தில் தயாளு அம்மாளை சந்தித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்து ஆசியும் பெற்றார்.
இன்று அன்னையர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கருவில் சுமந்து பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறையும் தியாகச் சுடரான அன்னையரை போற்றி பிரபலங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதன்படி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள தயாளு அம்மாளை சந்தித்து அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறுகையில் கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, பின் பாலூட்டி, தாலாட்டி, சீராட்டிப் பாராட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய உயர்ந்த கோயிலாம் அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில், அன்னையர் தினத்தில் பாசம் மிகுந்த வாழ்த்துகளைப் பெற்றுப் பெரிதும் மகிழ்ந்தேன்.

தாய், தாய்மொழி, தாய்நாடு அனைத்தும் நமை ஈன்ற அன்னையரே! இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை இதயத்தில் ஏந்தி ஏற்றிப் போற்றி மதித்திடுவோம்; காத்திடுவோம்.

அன்னையர் அனைவருக்கும் தாள்பணிந்த வணக்கத்தையும் வாய்மணக்கும் வாழ்த்துகளையும் உரித்தாக்கி உள்ளத்தால் கொண்டாடுகிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications