திமுக பொதுக்குழு: செயல் தலைவராகும் ஸ்டாலின் இளைஞரணி தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கிறார்?
திமுக பொதுக்குழு நாளை சென்னையில் கூடுகிறது. கட்சியின் செயல் தலைவராகும் ஸ்டாலின் தம் வசம் உள்ள இளைஞரணி தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கலாம்.
சென்னை: திமுக பொதுக்குழு சென்னையில் நாளை கூடுகிறது. அக்கட்சியின் செயல் தலைவராகும் ஸ்டாலின் தாம் நீண்டகாலம் வைத்திருந்த இளைஞரணி தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்பாரா என்பது சந்தேகம்தான்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார் கருணாநிதி. இருப்பினும் ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படும் போது கருணாநிதி கூட்டத்தில் இருக்க வேண்டும் என்பது திமுகவினர் எதிர்பார்ப்பு.
இதை நிறைவேற்றும் வகையில் ஸ்டாலினை செயல் தலைவராக்கும் கருணாநிதியின் அறிவிப்பு பொதுக்குழுவில் வாசிக்கப்படலாம் என தெரிகிறது. செயல் தலைவராகும் ஸ்டாலின் கட்சி பொருளாளர் பதவியை தொடர்ந்து தம்மிடமே வைத்துக் கொள்வார் எனவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தம் வசம் உள்ள இளைஞரணித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க ஸ்டாலின் முன்வந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞரணி இணை செயலர் வெள்ளகோவில் சாமிநாதன் அல்லது துணை செயலர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரில் ஒருவருக்கு இப்பதவி கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் முக அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவதற்கான சமிக்ஞைகள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர். அதேபோல சற்குணபாண்டியன் மறைவால் காலியாக உள்ள துணைப் பொதுச்செயலர் பதவியை தமக்கு தர வேண்டும் என கனிமொழி தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications