For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலாம்சாட்.. உலகின் மிகச் சிறிய செயற்கைகோளை தயாரித்து அசத்திய மாணவர்கள்... மு.க.ஸ்டாலின் பாராட்டு

உலகின் மிகச் சிறந்த செயற்கைகோளை தயாரித்த மாணவர்களுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: உலகின் மிகச் சிறிய செயற்கைகோளை தயாரித்த தமிழக மாணவர்களை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " உலகின் மிகச் சிறிய செயற்கைகோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இன்று காலை என்னை நேரில் சந்தித்தனர்.

MK stalin greets tamilnadu students who designed the world smallest satellite

3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில், 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைகோளை உருவாக்கி, அதனை நாசா அமைப்பு விண்ணில் செலுத்தியது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று.

சுமார் 240 நிமிடங்கள் விண்ணில் பறந்த செயற்கைகோளை காண்பித்து, அதன் திட்டப்பணிகள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் ஏவுகணை மனிதரான மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை நினைவுகூறும் வகையில் 'கலாம்சாட்' என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைகோளை வடிவமைத்த, தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ரிபாத் சாருக் மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன்.

MK stalin greets tamilnadu students who designed the world smallest satellite

தமிழகத்திலிருந்து இளம் விஞ்ஞானிகளாக உலக அரங்கில் நம்மை பெருமைபட வைக்கும் இதுபோன்ற சாதனைகள் இன்னும் பெருக வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

English summary
DMK working president MK Stalin congratulates the Tamilnadu students who designed the world's smallest satellite.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X