திமுகவுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்- ஜெ.அன்பழகன் வெளிப்படையான பேச்சு!
Recommended Video

சென்னை: திமுகவுக்கு ஸ்டாலின்தான் தலைவர் என்று ஜெ. அன்பழகன் வெளிப்படையாக பேசினார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து இன்றைய தினம் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே நேற்றைய தினம் கருணாநிதியின் சமாதிக்கு சென்று மு.க. அழகிரி குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில் எனது அப்பாவிடம் கட்சி ரீதியிலான ஆதங்கத்தை கொட்டி தீர்க்கவே வந்துள்ளேன்.

திமுகவில் சலசலப்பு
கலைஞரின் உண்மையான உடன்பிறப்புகள் என்னுடன்தான் உள்ளனர். இது நேரம் வரும் போது உங்களுக்கு புரியும் என்று பேசினார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பொதுக்குழு
எனினும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், அழகிரி எப்போதும் திமுகவுக்குள் வர முடியாது, சேர்க்கவும் மாட்டோம் என்று தெரிவித்துவிட்டார். இந்நிலையில் அவசரமாக கூடிய செயற்குழு கூட்டத்தில் திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்பது முடிவு செய்து அது பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மெரினா
இந்நிலையில் இன்றைய தினம் செயற்குழு கூட்டம் கூடியது. அதில் பேசிய ஜெ.அன்பழகன், டி.ஆர். பாலு உள்ளிட்டோர் அடுத்த கருணாநிதி ஸ்டாலின்தான் என்று கூறிவிட்டனர். ஜெ.அன்பழகன் பேசுகையில் மெரினாவையும் சேர்த்து 14 தொகுதிகளை வென்றவர் கருணாநிதி.

உறவு நேரடியாக
தமிழகத்தில் எந்த தலைவர் இறுதி அஞ்சலியை விட அதிக மக்கள் கூட்டம் கூடியது. கருணாநிதிக்கு இடம் இல்லை என்றவர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லாத நிலை ஏற்படுத்த வேண்டும். நமக்கு எதிராக செயல்படும் உறவை நேரடியாக துண்டிக்க வேண்டும்.

தொண்டர்கள்
இதை தலைவர் .... செயல்தலைவராக இருந்தாலும் ஸ்டாலின்தான் திமுகவின் தலைவராகப் போகிறார். எங்களுக்கு கலைஞரும் அவர்தான். தலைவர் விட்ட இடத்திலிருந்து ஸ்டாலின் தொடர வேண்டும். உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு பின்னால் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். சாதிப்போம். என்றார் ஜெ அன்பழகன்.

அறிவிப்பு
இவர்கள் பேசியதிலிருந்து ஸ்டாலின்தான் கருணாநிதியின் இடத்துக்கு வர போகிறார் என்பது தெளிவாகிறது. எனவே அடுத்து நடைபெறவுள்ள பொதுக் குழுவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications