தமிழகத்தில் மட்டும் தான் முதல்வரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது - ஸ்டாலின்
சென்னை: இந்தியாவிலே தமிழகத்தில் மட்டும் தான் முதல்வரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மாவட்ட வாரியாக அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதனிடையே செய்தியாளர்களுக்கு ஸ்டாலின்.பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: நேர்காணலில் நீங்கள் பங்கேற்க வரவில்லை என்று செய்தி வந்துள்ளதே ?
பதில்: அதை நானும் பத்திரிகையில் தான் படித்து தெரிந்து கொண்டேன். அந்த செய்தியை வெளியிட்டுள்ள தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியும், தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் என்னை நேரில் வந்து சந்தித்து சமாதானம் செய்ததால் இன்று வந்திருக்கிறேன்.
கேள்வி: நேர்காணல் எப்படி நடைபெறுகிறது ?
பதில்: நேர்காணல் சிறப்பாக, எழுச்சியாக, நம்பிக்கையோடு நடந்து கொண்டு இருக்கிறது.
கேள்வி: உங்களுடைய பிறந்த நாளை எளிமையாக கொண்டாட வேண்டுமென்று தெரிவித்தது ஏன் ?
பதில்: எப்போதுமே என்னுடைய பிறந்த நாளை எளிமையாக, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியாகவே நடத்துவது வழக்கம். இந்த முறை இன்னும் எளிமையாக நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
கேள்வி: தமிழக முதல்வரின் பிறந்த நாளை அரசு செலவில் நடத்துவது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
பதில்: ஒரு முதலமைச்சரின் பிறந்தநாளை அரசாங்கப் பணத்தில் மரக்கன்று நடுவதில் தொடங்கி அனைத்து வகையிலும் ஒரு அரசே செலவு செய்து கொண்டாடுவது இந்தியாவிலேயே ஒரு முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடும் அரசாக இன்றைக்கு தமிழ்நாடு சென்றுள்ளது.
கேள்வி: நேர்காணல் நடத்துவதில் என்ன பிரச்சினை ?
பதில்: அப்படியொரு செய்தியை வெளியிட்ட சிவராமன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் சென்றுதான் கேட்க வேண்டும்.
கேள்வி: முடியட்டும், விடியட்டும் என்று விளம்பரங்கள் வருகிறதே ?
பதில்: முடியட்டும், விடியட்டும் என்பதுதான் இப்போதைய எங்களது லட்சியம். அதுதான் மக்களுடைய முடிவும் கூட.
கேள்வி: அதற்கு வாட்சப்பில் அதிமுக அளித்துள்ள பதில் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
பதில்: அரசியல்ரீதியாக எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள்.
கேள்வி: திமுக கூட்டணிக்கு யார் யார் வர இருக்கிறார்கள் ?
பதில்: வந்தால் உங்களுக்குத் தெரியாமல் இருக்கப் போவதில்லை.
இவ்வாறு ஸ்டாலின் பதில் அளித்தார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications