எங்களுக்கு விஜயகாந்த் முக்கியமே அல்ல... அதிமுக ஓட்டைத்தான் பிரிப்பார்... சொல்வது மு.க.ஸ்டாலின்
சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிமுக வாக்குகளைத்தான் பிரிக்கும்; ஆகையால் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தை முக்கியமான சக்தியாக திமுக கருதவில்லை என அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு என்.டி.டி.வியின் பிரண்ணாய் ராய் குழுவுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி விவரம்:
தெரிஞ்சோ, தெரியாமலோ செய்த தவறுகளை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் என ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் நானே மக்களிடம் நேரடியாக சொல்லி வருகிறேன். நிதி சார்பாகவோ, அரசு அங்கீகாரம் தொடர்பாகவோ எங்கள் ஆட்களே சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால், மீண்டும் ஆட்சி அமைந்தால் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாது என்பதை நிச்சயமாக உறுதியளிக்கிறேன். அதற்காகத் தான் திமுக தேர்தல் அறிக்கையிலேயே லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

வளர்ச்சி முக்கியம்
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மக்களிடம் முன்வைக்கும் முக்கிய வாக்குறுதி வளர்ச்சி. தமிழக இளைஞர்கள் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட விரும்புகின்றனர். வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இளைஞர்களின் இந்த இரண்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே எங்கள் லட்சியம் நோக்கம்.

கரப்ஷன், கமிஷன், கலெக்ஷனுக்கு தடை
தமிழகத்தின் வளர்ச்சிக்கு கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் இல்லாத அரசாங்கத்தை நடத்துவோம். வெளிநாட்டு முதலீடு ஊக்குவிக்க சிங்கிள் விண்டோ சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படும். தொழில் தொடங்க அனுமதி கோரிய 100 நாட்களில் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். அதேபோல் தொழில் தொடங்க விரும்பும் உள்ளூர் வாசிகளுக்கும் சலுகைத் திட்டங்கள் வைத்திருக்கிறோம்.

மத்திய அரசுடன் சுமூக உறவு
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் மத்திய அரசுடனான உறவில் ஒரு பிரச்சினையும் இருக்காது. மத்திய அரசுடன் இசைந்து போவாம். பிரதமர் மோடியுடனான உறவில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

காங்கிரஸ் உறவு...
காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணியில்தான் இருந்தோம். இடையில், இலங்கைப் பிரச்சினையால் சிறிய பிரிவு ஏற்பட்டது.
குடும்ப சர்ச்சைகள்
எங்கள் குடும்ப சர்ச்சைகள் எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட பரப்புரை. அவ்வளவுதான். திமுகவை பொருத்தவரை விஜயகாந்த முக்கியமானவர் அல்ல. அவரால் அதிமுக ஓட்டுகள்தான் பிரியும்.
திமுக தலைவர் கருணாநிதி 93 வயதானாலும் 39 வயது இளைஞர் போல் சிறப்பாக பணியாற்றி வருகிறார்...அதனால் கட்சியில் மாற்றம் எதுவும் இல்லை.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications