சென்னை பேரணியில் செல்ஃபி எடுத்த தொண்டரை அறைந்த ஸ்டாலின் - வைரல் வீடியோ
சென்னை பேரணியில் செல்ஃபி எடுக்க வந்த தொண்டரின் கன்னத்தில் ஸ்டாலின் அறைந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
Recommended Video

சென்னை: பேரணி கூட்ட நெரிசலில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் கன்னத்தில் ஸ்டாலின் அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை அண்ணாசாலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சாலைமறியல் போராட்டம் பேரணி நடைபெற்றது.

ஊர்வலமாக நடந்து மெரினாவிற்கு சென்று கொண்டிருந்தனர். போராட்டத்திற்கு வந்த இளைஞர் ஒருவர், அவ்வளவு கூட்ட நெரிசலிலும் ஸ்டாலினுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க செல்போனை கொண்டு சென்றார். அதைத் தடுத்த ஸ்டாலின், அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்ததோடு அவரை தள்ளியும் விட்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட போது அவருடன் தொண்டர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் பயணம் செய்த போது, அவருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் ஸ்டாலின் அடித்ததாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியாவும் வைரலாக பரவியது.
இதனையடுத்து ஸ்டாலினிடம் அடி வாங்கிய ஆட்டோ டிரைவர் திலீப்பை சந்தித்த தி.மு.கவினர், அவரை ஸ்டாலினிடம் அழைத்து வந்தனர். ஸ்டாலினைச் சந்தித்த அவரும் ஸ்டாலின் தன்னை அடிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலினுடன் ஆட்டோ டிரைவர் திலீப் செல்ஃபி எடுத்து கொண்டார்.
இதேபோல சென்னையில் அடி வாங்கிய இளைஞரை அழைத்து தனியாக செல்ஃபி எடுத்துக்கொள்வாரா ஸ்டாலின் என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications