...த்தூ..விஜயகாந்த்துக்கு ஸ்டாலின் சப்பை கட்டு! நிதானமற்றவர் கேள்விக்கு முதலில் பதில் சொல்லனுமாம்!!
சென்னை: தமிழக அரசியலில் "....த்தூ" தலைவர் என பெயர் பெற்றுவிட்ட விஜயகாந்துக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருப்பது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்த விஜயகாந்த், நிதானமே இல்லாத நிலையில் திடீரென பத்திரிகையாளர்களைப் பார்த்து, ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்பீங்களா? ....த்தூ.......என கொஞ்சமும் நாகரிமின்றி காறி உமிழ்ந்தார்.

அவரது இந்த செயல் பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் ஒருநபர், நாலாந்தர மனிதரைக் காட்டிலும் நிதானமின்றி சாலையில் சாயக் கிடக்கும் ஒருமனிதரைப் போல வாயில் வந்ததையெல்லாம் துப்பித் தொலைவதை எப்படித்தான் சகிப்பது என்பது அவர்களின் கேள்வி.
இப்படிப்பட்ட விஜயகாந்த்தின் செயலை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரித்து இன்று பேட்டி கொடுத்துள்ளது அக்கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதாவிடம் இதுபற்றி கேட்டீர்களா? என நானும் கேட்டிருக்கிறேன். விஜயகாந்தும் கேட்டிருக்கிறார்... ஆனால் இதுவரை நீங்கள் ஜெயலலிதாவிடம் பேட்டி எடுத்தீர்களா? கேள்வி கேட்டீர்களா? என்பதை பற்றி சொல்லவில்லை.
ஆகையால் செய்தியாளர்கள்தான் விஜயகாந்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என 'அதிபுத்திசாலித்தனமாக' பதில் அளித்துள்ளார்.
எப்படியாவது விஜயகாந்த் கூட்டணிக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக எந்த நிலையைத் தாண்டியும் செல்வோம் என மு.க.ஸ்டாலின் நிலைப்பாடு எடுக்கிறார்...ஆனால் முதுபெரும் பத்திரிகையாளரான தி.மு.க. தலைவர் கருணாநிதி இதை ஏற்கிறாரா?
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications