திமுகவில் இனி எல்லாமே ஸ்டாலின் மயம்!
சென்னை: மு.க. அழகிரியை நீக்கியதன் மூலம் திமுகவில் இனி அனைத்துமே ஸ்டாலின் மயம் என்ற நிலை உருவாகிவிட்டது.
திமுகவை உருவாக்கியது அண்ணா, நெடுஞ்செழியன் உட்பட மூத்த தலைவர்கள்.. அண்ணா மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் இருந்தாலும் மெல்ல மெல்ல திமுகவை வசமாக்கினார் கருணாநிதி.
எம்.ஜி.ஆர் நீக்கத்துக்குப் பின்னர் திமுக என்றால் கருணாநிதி என்றானது. 1980களில் திமுக என்றால் கருணாநிதி அவரது அக்காள் மகன் முரசொலி மாறன் மட்டும்தான் என்றானது.

வைகோ நீக்கம்
அப்போது மெல்ல மெல்ல தலைஎடுத்துக் கொண்டிருந்தார் ஸ்டாலின். ஸ்டாலின் வளர்ச்சிக்கு வைகோ தடையாக இருக்க அவரும் நீக்கப்பட்டார்.

கோதாவில் குதித்த அழகிரி
பின்னர் ஸ்டாலினுக்குப் போட்டியாக அவரது அண்ணன் மு.க. அழகிரி கோதாவில் குதித்தார்.

தயாநிதி, கனிமொழி
மு.க. அழகிரி கோதாவில் குதித்துக் கொண்டிருக்க முரசொலி மாறன் மறைந்து போனார். அவரது மறைவைத் தொடர்ந்து தயாநிதி மாறன் அரசியலுக்கு வந்தார். அதேபோல் கருணாநிதியின் மகள் கனிமொழியும் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டார்.

ஸ்டாலின் அணியில் தயாநிதி
இதனால் மு.க. அழகிரி, தயாநிதி, கனிமொழி ஆகிய குடும்ப உறுப்பினர்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் ஸ்டாலின். பின்னாளில் தயாநிதி, ஸ்டாலின் அணியில் இணைந்துவிட்டார். ஒரு கட்டத்தில் கனிமொழியும் ஸ்டாலின் ஆதரவாளராக இருந்தார்.

முரசொலி, கலைஞர் டிவி
அதேபோல் திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி, கருணாநிதி குடும்பத்து தொலைக்காட்சியான கலைஞர் டிவி போன்றவற்றிலும் ஸ்டாலினின் செல்வாக்கு கட்டுக்குள்தான் இருந்தது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல கலைஞர் டிவியின் பிடி ஸ்டாலினுக்குள் நகர நகர இப்போது முழுமையாக அவரது கட்டுக்குள் இருக்கிறது.
இதேபோல்தான் முரசொலி ஏட்டின் நிலைமையும். முரசொலி நிர்வாகமும் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. திமுக தலைமையகமான அறிவாலயத்தில் கருணாநிதி குடும்பத்து உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலரும் இருந்தாலும் தற்போது ஸ்டாலினின் ஆதரவாளர்களே அதிகம்.
இந்நிலையில் கட்சியில் தமக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்த அழகிரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சி முழுமையாகவே ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்றே கூறப்படுகிறது.

காங்கிரஸுடன் கூட்டணி கூடாது
காங்கிரஸுடன் கூட்டணி கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் ஸ்டாலின்.

தேமுதிகதான் வேண்டும்
தேமுதிகவுடன் கூட்டணி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவரும் ஸ்டாலின்.

அழகிரி டிஸ்மிஸ்
இதேபோல் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அழகிரி மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றவரும் ஸ்டாலின்.

ஸ்டாலின் வசமான திமுக
இப்போது ஸ்டாலின் நினைத்த அனைத்துமே நடந்தேறிவருவதால் இனி திமுகவில் ஸ்டாலினே எல்லாம் என்ற நிலை உருவாகிவிட்டது என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications