மனசெல்லாம் சந்தோஷம் நிரம்பி வழிகிறது.. நன்றி கூறி நெகிழ்ந்த மு.க.ஸ்டாலின்
வாழ்த்து கூறிய அனைவருக்கும் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவராக பொறுப்பேற்றதற்கு தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் உணர்ச்சி பெருக்குடன் இனிய வார்த்தைகளில் நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
பல்வேறு தரப்பட்ட எதிர்ப்புகள், குழப்பங்கள், விமர்சனங்களுக்கிடையே, முறையாக தேர்தல் நடத்தப்பட்டு ஏகோபித்த ஆதரவுடன் திமுக தலைவராக நேற்று பொறுப்பேற்று கொண்டார் மு.க.ஸ்டாலின்.

கன்னத்தில் முத்தம்
கட்சி தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதும், முதல் ஆளாக அவருக்கு கன்னத்தில் முத்தட்டு வாழ்த்து தெரிவித்தார் அன்பழகன். அதன்பின் பொதுக் குழுக் கூட்டம் முடிவடைந்தவுடன்,நேராக அண்ணா சதுக்கம் சென்ற மு.க.ஸ்டாலின், கருணாநிதி நினைவிடம், அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வேப்பேரி பெரியார் திடலுக்குச் சென்று, ஈ.வே.ரா., நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

கர்ஜனை பேச்சு
பின்னர், மோடி அரசுக்கு பாடம் புகட்டவும், மாநில அரசைத் தூக்கி எறியவும் தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று தனது முதல் பேச்சிலேயே கர்ஜித்தார். இந்த கர்ஜனை பேச்சு அரசியல் முக்கியத்துவம் ஒன்றாகவும், திமுகவின் எதிர்கால அரசியல் போக்கையே மாற்றக்கூடிய ஒன்றாகவும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. தன் கரகொலி பேச்சையடுத்து வீட்டுக்கு வந்த ஸ்டாலினுக்கு ஆரத்தியுடன் முகமலர்ச்சியுடன் குடும்பத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்வளவையும் செய்த ஸ்டாலின் கூடவே, ராஜாத்தி அம்மாளை நேரில் சந்தித்து எடுத்து ஆசி பெறவும் தவறவில்லை.
|
தலைவரின் இருக்கை
இறுதியாக, கட்சியின் மூத்த தலைவர்கள், குடும்பத்தினர், தொண்டர்களின் இதயம் நிறைந்த முழக்க வாழ்த்தொலிகளுக்கு பின்னர், அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைவர் இருக்கையில் அமர்ந்தார். பல சிறப்பு மிக்க சாதனைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை நிகழ்த்திய அந்த இருக்கையில் அமர்ந்த பின்னர் கட்சி பணிகளிலும் ஸ்டாலின் ஈடுபட்டார்.

சந்தோஷம் வழிகிறது
"திமுக தலைவரானதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவால் என் மனம் அளவுகடந்த சந்தோஷத்தால் வழிகிறது. உங்களின் அனைத்துவிதமான எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவேன். திமுக தனது முதன்மை கொள்கையிலிருந்து என்றுமே கடமை தவறாது செயல்படும். எப்போதுமே அது தன் கடமையை செவ்வனே ஆற்றி கொண்டு செல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
