ஜெ. மரணம்.. திருநாவுக்கரசரின் தொடரும் அதிமுக 'வக்காலத்து'... செம கடுப்பில் ஸ்டாலின்!
அதிமுக தொடர்பான திமுக விமர்சனங்களுக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸின் தலைவர் திருநாவுக்கரசர் தொடர்ந்து பதில் தருவதற்கு ஸ்டாலின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை: அதிமுக மீதான விமர்சனங்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தொடர்ந்து பதிலடி வருவதற்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவரது புகைப்படத்தையாவது வெளியிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார். ஆனால் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கடுமையாக எதிர்த்தார்.

இடைக்கால முதல்வர்
அதேபோல் ஜெயலலிதா சிகிச்சை பெறுவதால் இடைக்கால முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வரை நியமிக்கவும் திமுக வலியுறுத்தியது. இதற்கும் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவிக்க திமுகவினர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இன்னமும் அதிமுக பாசத்துடன் திருநாவுக்கரசர் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது.

வெள்ளை அறிக்கை..
தற்போது ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் அவருக்கு தரப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இதனால் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியிருந்தார். இதனை தாமும் வலியுறுத்துவதாக ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஜெ. உயிருடன் வருவாரா?
ஆனால் திருநாவுக்கரசரோ, வெள்ளை அறிக்கையோ, கருப்பு அறிக்கையோ.. அதை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா? என கிண்டலடித்திருந்தார். திருநாவுக்கரசரின் இந்த பேட்டி குறித்து ஸ்டாலினிடம் எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து திருநாவுக்கரசர் அளித்த முழு பேட்டியையும் பார்த்திருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் அதிருப்தி
திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளது நமக்கான பதில்தான்... அவர் சசிகலாவின் கணவர் நடராசன் சொல்வதை கேட்டுத்தான் பேசுகிறார்... என கோபப்பட்டுள்ளார் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸுக்கு போனடித்த ஸ்டாலின் தம்முடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து பீட்டர் அல்போன்ஸும் திருநாவுக்கரசரை தொடர்பு கொண்டு ஸ்டாலினின் அதிருப்தி குறித்து தெரிவித்திருக்கிறார். ஆனாலும் தாம் பேசியது நியாயமானதே என வாதிட்டாராம் திருநாவுக்கரசர்.
-
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications