திருமண விழாக்களில் என்னை புகழ்ந்து பேச வேண்டாம்: ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
திருமண விழாக்களில் தம்மை புகழ்ந்து பேச மு.க.ஸ்டாலின் தடை விதித்துள்ளார்.
சென்னை: திருமண விழாக்களில் தம்மை புகழ்ந்து பேச வேண்டாம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுகவின் செயல் தலைவரான பின்னர் ஸ்டாலின் தமது காலில் யாரும் விழ வேண்டாம் என அறிவுறுத்தினார். அதேபோல் பேனர்களை வைக்காமல் திமுக கொடியை நட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமண விழா இன்று பழனியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், இந்த திருமணத்தை சென்னையில் நடத்தாமல் பழனியில் நடத்தியதற்காக நான் வாகை சந்திரசேகருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் சென்னையில் நடத்தி இருந்தால் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்க வேண்டி இருக்கும்.
அவருடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டுதான் சென்னையில் நடத்தாமல் பழனியில் அவர் நடத்தி இருக்கிறார். கருணாநிதி அனுப்பி உள்ள வாழ்த்து கடிதத்தை அவரிடம் நான் வழங்கியுள்ளேன். திருமண விழாக்களில் என்னை புகழ்ந்து பேசுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் மணமக்களை மட்டும் வாழ்த்தி பேசுமாறு தி.மு.க. நிர்வாகிகளிடம் கூறினேன் என்றார்.
ஸ்டாலினின் தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் திமுக தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே












Click it and Unblock the Notifications