திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்; பொதுச்செயலர் துரைமுருகன்?
திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை: திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலினும் பொதுச்செயலராக துரைமுருகனும் விரைவில் நியமிக்கப்படக் கூடும் என அண்ணா அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன் இருவரும் முதுமை காரணமாக பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதில்லை. அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களிலும் கூட கருணாநிதி பிரசாரம் செய்யவில்லை.

ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை
இந்த நிலையில் திமுகவில் சில மாற்றங்கள் செய்யப்படக் கூடும் என கூறப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக திமுக பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் இது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

செயல் தலைவர் ஸ்டாலின்?
தற்போதைய நிலையில் திமுக தலைவராக கருணாநிதியே நீடிப்பார்; அதே நேரத்தில் ஸ்டாலினுக்காக செயல் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட உள்ளதாம்; அத்துடன் தற்போது முதன்மை செயலராக இருக்கும் துரைமுருகனை பொதுச்செயலராக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

பொருளாளர் பதவி யாருக்கு?
ஸ்டாலின் வசம் உள்ள பொருளாளர் பதவி எ.வ.வேலுவுக்கு கொடுக்கப்பட உள்ளது. துரைமுருகன் வகித்து வரும் முதன்மை செயலர் பதவி திண்டுக்கல் ஐ. பெரியசாமிக்கு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது என்கின்றன அண்ணா அறிவாலய வட்டாரங்கள்.

ஸ்டாலின்தான் தலைவர்...
இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் நேற்று நடைபெற்ற நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில், திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என துரைமுருகன், பழ. கருப்பையா உள்ளிட்டோர் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications