அரசியல்வாதிகள் ஸ்டைலில் மதுரை பல்கலை. துணைவேந்தருக்கு போஸ்டர் ஒட்டிய "விசுவாசிகள்"!
மதுரை: அரசியல்வாதிகளே தோற்றுப் போய் விடுவார்கள் போல.. அப்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் விசுவாசிகள், முதல்வர் ஜெயலலிதா படத்தைப் போட்டு, பிரமாண்ட அம்மா எழுத்துடன், துணைவேந்தர் பணியில் கல்யாணி தொடர அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி கூறியுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகேயும், பிற இடங்களிலும் இந்த போஸ்டர்கள் பிரமாண்டமாக பளிச்சிட்டதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
பலருக்கோ, ஒருவேளை கல்யாணி மதிவாணன் அதிமுகவில் சேர்ந்து விட்டாரோ என்று சந்தேகம் வரும அளவுக்கு அந்த போஸ்டர்கள் கலர்ஃபுல்லாக இருந்தன.

துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமித்து 9.4.2012 அன்று தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டார். அதன்படி, கல்யாணி மதிவாணன் துணைவேந்தராக பதவியேற்றுக்கொண்டார். பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பதவி வகிக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

இணைப் பேராசிரியை மட்டும்தான்
கல்யாணி மதிவாணன் இணை பேராசிரியையாக மட்டுமே பணியாற்றி உள்ளார். பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் கல்யாணி மதிவாணனை துணைவேந்தராக நியமித்தது சரியல்ல. எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, கல்யாணி மதிவாணன் பதவி நியமனம் செல்லாது என்றும், அவரது நியமனம் ரத்து செய்யப்படுகிறது என்றும் கடந்த ஜூன் 26-ந் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கல்யாணி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்.

உச்சநீதிமன்றம் அனுமதி
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. கல்யாணிக்காக, பிரபல மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகியிருந்தார்.

பிரமாண்டக் கொண்டாட்டம்
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக பிரமுகருக்கு அடிக்கப்படும் போஸ்டர் போலவே அது உள்ளது.

"அம்மா" படத்துடன்
முதல்வர் ஜெயலலிதாவின் பெரிய புகைப்படத்துடன், கீழே கல்யாணி மதிவாணன் படத்தையும் போட்டு போஸ்டர் அடித்துள்ளனர்.

கல்வித்தாய் ஜெயலலிதா
கல்வித்தாய் ஜெயலலிதா ஆட்சியில் கண்ணியமிகு துணைவேந்தர் பதவியில் தொடர அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. இப்படிக்கு உண்மை விசுவாசிகள் என்று அதில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்கள்தான் இப்போதைக்கு மதுரையின் "ஹாட்" விஷயமாக மாறியுள்ளது!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications