டிடிவி தினகரனுடன் கருணாஸ் திடீர் சந்திப்பு!
டிடிவி தினகரனுடன் அதிமுக ஆதரவு எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனுடன் அதிமுக ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் திடீர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எடப்பாடி அரசு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கருணாஸ் டிடிவி தினகரனை சந்தித்து பேசி வருகிறார்.
அதிமுக அம்மா அணியும் இரண்டாக உடைந்துள்ளது. ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர். 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் டிடிவி தினகரனை ஓரம்கட்டிவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு கூட டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை புறக்கணித்தனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் டிடிவி தினகரனை சந்தித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் கருணாஸ் அவரை சந்தித்து வருகிறார். டிடிவி தினகரனுடனான கருணாஸின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications