‘ஏலே நம்ம எம்.எல்.ஏ பாடுறாங்கலே...’ அதிமுகவினரை அசத்திய 'சங்கரன்கோவில்' முத்துச்செல்வி
சங்கரன்கோவில்: ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ சாதனை விளக்க கூட்டம் போட்டால், தொண்டர்களை கவர ஆடல் பாடல் நிகழ்ச்சி போட்டு அமரவைப்பார்கள். பிரியாணி கண்டிப்பா இருக்கு வாங்கிட்டு போங்க என்று அவ்வப்போது உற்சாகமாக பேசுவார்கள்.
நெல்லையில் இப்படித்தான் அ.தி.மு.க ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு சற்று தாமதம் ஆனதால், கட்சிக்காரர்கள் கலைய ஆரம்பித்தனர். ஆஹா இது சரிப்பட்டு வராதே போய் தூங்கிட்டாங்கன்னா என்ன செய்வது என்று யோசித்த சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ முத்துசெல்வி, திடீரென மேடையில் ஏறிய மைக்கை பிடித்தார்.

‘தொட்ட இடம் துலங்கவரும்.. தாய்க்குலமே வருக. கண் பட்ட இடம் பூ மலரும்.. பொன் மகளே வருக பொன் மகளே வருக... நீ வருக...!' என ‘முத்துச்சிப்பி' படத்தின் பாடலை பாடத் தொடங்கினார். குரலும் இனிமையாக கை கொடுக்கவே "ஏலே நம்ம எம்.எல்.ஏ பாடுறாங்கலே...'' என ஒட்டுமொத்த கூட்டமும் திரும்ப வந்து அமர்ந்து பாடலை ரசிக்கத் தொடங்கியது.
கட்சித்தொண்டர்கள் கொடுத்த உற்சாகத்தில் முழு பாடலையும் பாடி முடித்தார். கை தட்டல் ஆராவார விசில் அடித்த தொண்டர்கள், ‘இன்னொரு பாட்டு பாடுங்க...' என்று ஆர்ப்பரிக்க... போதும்பா என்று வெட்கத்துடன் கூறி கீழே இறங்கினாராம் முத்துசெல்வி.
எப்படியோ பாட்டு பாடி தொண்டர்களை கவர்ந்துவிட்டார் எம்.எல்.ஏ முத்துச்செல்வி என்று கட்சியினர் பேசிக் கொண்டனர். அப்போ அடுத்த தேர்தல் பிரச்சாரத்தில் பாட்டு பாடி ஓட்டு கேட்க ஒரு எம்.எல்.ஏ ரெடியாகிவிட்டார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications