ஜெ. வரவேற்பில் செங்கோட்டையன் "திடீர்” மயக்கம்- அமைச்சர் பதவி கிடைக்காத அதிர்ச்சி?
சென்னை: சென்னையில் நேற்று தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை வரவேற்க நின்றிருந்த செங்கோட்டையன் எம்.எல்.ஏ மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஜெயலலிதாவின் புதிய அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கும் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போனதால் அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை வரவேற்பதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அங்கு திரண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த செங்கோட்டையன் எம்.எல்.ஏ. திடீரென்று மயங்கினார்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் கீழே விழுந்து விடாமல் பிடித்தனர். எம்.எல்.ஏக்கள் சிலர் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர்.
ஜெயலலிதாவின் புதிய அமைச்சரவையில் செங்கோட்டையனும் இடம்பெறுவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அமைச்சரவை பட்டியலில் செங்கோட்டையனின் பெயர் இல்லை. இதைக் கேள்விபட்டு செங்கோட்டையன் மயக்கமடைந்தாரா? அல்லது வெயிலால் மயக்கமடைந்தாரா என தெரியாமல் அதிமுகவினர் குழம்பி நின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications