ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவுக்கு ம.ம.க. ஆதரவு: ஜவாஹிருல்லா
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவுக்கு மமக ஆதரவு தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரிக்கும் என அதன் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் இன்று செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது:

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. டெங்கு விவகாரத்தில் உண்மை நிலையை மக்களுக்கு தமிழக அரசு தெரியப்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் இழப்பீடு தர வேண்டும். விரைவில் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவை மனித நேய மக்கள் கட்சி ஆதரிக்கும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.












Click it and Unblock the Notifications