திமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா இணைய வேண்டும்- ஜவாஹிருல்லா அழைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இணைய வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா இன்று சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது:

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் இந்த கூட்டணியில் தேமுதிக, தமாகா ஆகியவை இணைய வேண்டும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து கூறிய மு.க.ஸ்டாலின், மனித நேய மக்கள் கட்சியுடனான பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது; மகிழ்ச்சி தருகிறது. அந்த கட்சிக்கான தொகுதிகள் குறித்து கருணாநிதியிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications