தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க வரவேண்டும்: ஜவாஹிருல்லா

சேலத்தில் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது:
பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை இஸ்லாமியர்கள் ஆதரிக்க வேண்டும் என்று ராஜ்நாத்சிங் கேட்டு கொண்டுள்ளார். தேர்தல் காரணத்தால் அவர் அப்படி கூறுகிறார். பல்வேறு தரப்பு மக்களுக்கு நம்மை செய்யும் அரசு மத்தியில் வர நாங்கள் விரும்புகிறோம்.
பாபர்மசூதி இடிப்பு சம்பவம், குஜராத்தில் தாக்குதல் சம்பவங்களை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். நாங்கள் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறோம்.
விரைவில் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளோம். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். இந்த கூட்டணிக்கு தே.மு.தி.கவும் வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இதைத்தான் தே.மு.தி.க. தொண்டர்களும் விரும்புகிறார்கள்.
இதனால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு வரவேண்டும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.












Click it and Unblock the Notifications