நல்லா "டைம் பாஸ்" ஆகும்.. வைகோ கூட்டணி குறித்து கிண்டலடித்த நாஞ்சில் சம்பத்
நாகர்கோவில்: மதிமுக தலைமையிலான மக்கள் நல கூட்டணியால் யாருக்கும், எந்தப் பாதிப்பும் கிடையாது. மாறாக, அவர்களுக்கு நன்றாக பொழுதுபோகும் என்று கிண்டலடித்துள்ளார் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை ஆகியவை இணைந்து புதிதாக மக்கள் நல கூட்டணி என்ற அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுக்கு அவர்கள் அழைப்பும் விடுத்துள்ளனர்.

இந்தக் கூட்டணி குறித்து அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், மக்கள் நல கூட்டு இயக்கம் கரை சேர முடியாது. இந்த கூட்டியக்கத்தின் செயல்பாடுகளால் தேர்தல் வரை அவர்களுக்கு நல்ல பொழுது போகும். வேறு எந்த நடவடிக்கையும் இருக்காது. இவர்களால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
அதிமுக ஆட்சியில் இருக்கும்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலை உலுக்கியபோதும் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 39 தொகுதிகளில் நின்று 37 இடங்களில் வென்று அகில இந்தியாவில் 3வது பெரிய கட்சி என்று விசுவரூபம் எடுத்துள்ளோம்.
எனவே, இவர்களால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வந்துவிட போவதில்லை. அதிமுக பட்டத்து யானை. இதனை சிறு எலிகளால் சிதைக்க முடியாது என்றார் சம்பத்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications