கோவையில் ரூ.300க்கு டூயல் சிம் செல்போன்.. வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்
கோவையில் 300 ரூபாய்க்கு செல்போன் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்க மக்கள் அலைமோதி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் தனியார் மொபைல் நிறுவனம் ஒன்று 300 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. மலிவு விலையில் கிடைக்கும் இந்த செல்போன்களை வாங்க மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் மொபைல் நிறுவனம் ஒன்று 300 ரூபாய்க்கு செல்போன்களை விற்பனை செய்கிறது. இந்த மலிவு விலை செல்போன்களில் இரட்டை சிம், கேமிரா, எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே மக்களின பணத்தட்டுப்பாடு காரணமாக அவர்களின் வசதிக்காக மலிவு விலை போனை கொண்டு வந்துள்ளதாக மொபைல் போன் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
விரைவில் 2000 ரூபாய்க்கு ஆண்டிராய்டு மொபைல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications