மதுரைக்கு வருகிறார் மோடி.. தயாராகிறது தே.ஜ.கூ.....!
மதுரை: கோக்குமாக்காக இருந்தாலும் கூட தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ள பாஜக படு தெம்பாகத்தான் திரிகிறது. இந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வேறு மதுரைக்கு வரப் போகிறாராம். இதனால் மதுரையைக் கலக்கி விடும் முஸ்தீபுகளை இப்பவே ஆரம்பித்து விட்டனர் பாஜகவினர்.
விரைவில் , மதுரையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது.
இந்த கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தி அனைவரையும் அதிர வைக்க வேண்டும் என்று பாஜகவினர் திட்டமிட்டுள்ளனராம்.

திமுக அதிமுகவுக்கு மாற்றாக
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக பாஜக கூட்டணியை அமைத்துள்ளது.
கலந்த சாதம் போல
பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்கு நாடு மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக மக்கள் கட்சி ஆகியவை இணைந்துள்ளது.
திருச்சி -சென்னையில்
பாஜக பிரதமர் வேட்பாளர் என நரேந்திர மோடியை அறிவித்த பின்பு, அவர் தமிழகத்தில் திருச்சி, மற்றும் சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்துவிட்டார். அதன் பின்பு தான், தமிழகத்தி்ல் பாஜக வலுவான கூட்டணியை அமைக்க முடிந்தது.
மறுபடியும் பலம் கூட்ட
இந்த நிலையில், நரேந்திர மோடி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்தால் அது தங்களது கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் என தமிழக பாஜக தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் நம்புகின்றார்களாம்.
முக்கியத் தலைவர்களுக்காக வாக்கு கேட்டு
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதியிலும், பாஜக துணைத் தலைவர் ஹைச்.ராஜா சிவகங்கை தொகுதியிலும், பாஜக தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
தென் மாவட்டங்களைக் குறி வைத்து
இந்த நேரத்தில் தென் மாவட்ட மக்களை குறிவைத்து நரேந்திர மோடி மதுரையில் பிரசாரம் செய்தால், அது தங்களுக்கு வாக்கு வங்கியை அதிகப்படுத்தி தரும் என இந்த தலைவர்கள் நம்புகின்றார்களாம்.
ஒரே மேடையில் ஒட்டுக்காக- ஓட்டுக்காக கை தூக்கி
அத்துடன், தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் ஒரே மேடையில் நின்றால் , அது வேட்பாளர்கள் வெற்றிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகின்றார்களாம். இந்த தகவல் மோடி கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளாம்.
மதுரையில் மோடி பேச்சு.. உரை வீச்சு
ஆக விரைவில், மதுரை மண்ணில் பாஜக கூட்டணி தலைவர்களுடன் மோடி பேச்சும், உரை வீச்சும் கேட்கலாம்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications