எல்லாவற்றிலும் மோடி தான் ஃபர்ஸ்ட்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதிலும் புதிய சாதனை படைத்துள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தான் செல்லும் இடம் எல்லாம் தொழில் முனைவோரை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தி வருகிறார்.
அவரது வெளிநாட்டுப் பயணங்களில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. அதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்,

நேபாளம்
2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோடி நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 17 ஆண்டுகள் கழித்து நேபாளம் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி தான். முன்னதாக 1997ம் ஆண்டு ஐ.கே. குஜ்ரால் நேபாளம் சென்றார்.

ஆஸ்திரேலியா
2014ம் ஆண்டு நவம்பர் மாதம் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். 28 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சென்ற முதல் இந்திய பிரதமர் மோடியே. முன்னதாக ராஜீவ் காந்தி 1986ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இலங்கை
கடந்த மார்ச் மாதம் மோடி இலங்கைக்கு சென்றார். 28 ஆண்டுகள் கழித்து இலங்கை சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். முன்னதாக 1987ம் ஆண்டு ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்றார்.

செஷல்ஸ்
இந்திரா காந்தியை(1981) அடுத்து 34 ஆண்டுகள் கழித்து செஷல்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி. அவர் கடந்த மார்ச் மாதம் செஷல்ஸ் சென்றார்.

கனடா
மோடி கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 42 ஆண்டுகள் கழித்து கனடா சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி. முன்னதாக 1973ம் ஆண்டு இந்திரா காந்தி கனடாவுக்கு சென்றார்.

மங்கோலியா
மோடி கடந்த மே மாதம் மங்கோலியா சென்றார். மங்கோலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் அவர் தான்.

அமீரகம்
பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 34 ஆண்டுகளில் அமீரகம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக 1981ம் ஆண்டு இந்திரா காந்தி அமீரகம் சென்றார்.

அயர்லாந்து
59 ஆண்டுகளில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். அவர் தற்போது அமெரிக்கா செல்லும் முன்பு அயர்லாந்து சென்றார். முன்னதாக ஜவஹர்லால் நேரு 1956ம் ஆண்டு அயர்லாந்து சென்றார்.

கலிபோர்னியா
மோடி தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளார். 33 ஆண்டுகளில் கலிபோர்னியா சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி தான். முன்னதாக இந்திரா காந்தி 1982ம் ஆண்டு கலிபோர்னியா சென்றிருந்தார்.












Click it and Unblock the Notifications