ராமேஸ்வரம் புண்ணிய பூமியை தொடுவதில் மிகவும் பெருமை... தமிழில் பேசிய மோடி பெருமிதம்
ராமேஸ்வர புனித மண்ணை தொடுவதில் பெருமிதம் அடைகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கொண்டார்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் என்ற புனித பூமியானது அப்துல் கலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையாளரை கொடுத்துள்ளது என்று மோடி பெருமை பொங்க தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் பேகரும்பில் உள்ள கலாமுக்கான மணி மண்டபத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ராமேஸ்வரம்- அயோத்தி ரயில் சேவையை தொடங்கிவைத்தார்.

அதன் பின்னர் அவர் உரையாற்றிய போது வணக்கம் என்று தொடங்கி ராமேஸ்வரத்துக்கு வந்ததை பாக்கியமாக கருதுகிறேன் என்று தமிழில் கூறிய அவர் மேலும் தனது பேச்சுகளை இந்தியில் தொடந்தார்.
அப்போது அவர் கூறுகையில், ராமேஸ்வர புனித மண்ணை தொடுவதில் பெருமிதம் அடைகிறேன். இது அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு 1897-ல் சுவாமி விவேகானந்தர் கால்பதித்த மண்.
இந்த மண் குறிப்பிட்ட மதத்துக்கான பூமி அல்ல. ஆன்மீக பூமியாக கருதப்படுகிறது. அப்துல் கலாம் போன்ற ஆழந்த சிந்தனையாளரை கொடுத்த பூமிதான் ராமேஸ்வரம்.
கலாம் நினைவு நாளில் இங்கு வருவது எனது பாக்கியமாக கருதுகிறேன். கலாம் அவர்கள் மறைந்தபோது அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தேன். அதன்படி தற்போது கட்டி முடிக்கப்பட்டு இன்று அந்த நினைவுச் சின்னம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கலாமின் சிந்தனைக்கேற்ப அவரது மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மோடி.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications