மோடி ஜி.. இப்படி தமிழை மொழி பெயர்த்தால் பாஜகவுக்கு வரும் ஓட்டும் வராது!

Subscribe to Oneindia Tamil

ஒசூர்: பாஜகவுக்கு கிடைக்கும் வாக்குகளையும் கெடுத்துவிடும் அளவுக்கு இருந்தது, பிரதமர் மோடியின் ஹிந்தி உரையை தமிழில் (!) மொழி பெயர்த்த பெண்ணின் பேச்சு.

ஆம்.. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஒசூரில் இன்று மாலை பிரதமர் நரேந்திரமோடி, பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பொதுவாக மோடியின் ஹிந்தி பேச்சை மொழி பெயர்க்க, அனுபவம்மிக்க ஹெச்.ராஜா பயன்படுத்தப்படுவார்.

Modi's Tamil translator struggling to speech in Hosur

இன்றைய தினம், மோடியின் பேச்சை, பாஜ கட்சியின் மாநில துணை தலைவர் முனைவரி பேகம் மொழி பெயர்த்தார். இஸ்லாமிய பெண் என்பதால் அவரை முன்னிருத்த பாஜக முயற்சி செய்ததாக தெரிகிறது.
ஆனால், அவர் ஹிந்தியும், இன்றி, தமிழும் இன்றி, நடுவே ஒரு மாதிரியான மொழியில் பேசி கூட்டத்திற்கு வந்த தொண்டர்களை நெளிய வைத்தார்.

ஊழலுக்கு ஊழம், குடோனுக்கு கோதான், திட்டங்களுக்கு யோஜனை, நிறைய என்பதற்கு பதிலாக நெர்ய, விவசாயிகள் என்பதற்கு பதிலாக, வெவசாயிகள், அரசாங்கம் என்பதற்கு பதில் அர்ச்சாங்கம்.. இப்படியெல்லாம் மொழி பெயர்த்து பேசினார் முனைவரி பேகம்.

கர்நாடகாவை சேர்ந்தவர்கள் தமிழை அரைகுறையாக பேசினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது, எல்லை மாவட்டமான ஒசூரில் முனைவரி பேகம் பேசிய பேச்சு.

மோடியின் பேச்சையும் முழுமையாக அவரால் சரியாக மொழி பெயர்க்க முடியவில்லை என்பதை, ஹிந்தி-தமிழ் தெரிந்தவர்கள் அறிந்தனர். இதேபோன்ற மொழி பெயர்ப்பை வைத்திருந்தால், தமிழக மக்களிடம் பாஜகவால் ரீச் ஆக முடியாது என்பது திண்ணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+