அதிமுக, திமுகவிடமிருந்து விடுதலை வாங்கித்தர வந்துள்ளேன்.. வேதாரண்யத்தில் மோடி ஆவேச பேச்சு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இன்று நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
வேதாரண்யத்தில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் வேதரத்தினம். 3 முறை எம்.எல்.ஏவாக இருந்த வேதரத்தினம் திமுகவில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்த நிலையில், இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேதரத்தினத்திற்கு தனிப்பட்ட முறையில் தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளதாலும், மீனவர்கள் மத்தியில் பாஜக அரசு மீது மதிப்பு உள்ளதாலும், வேதாரண்ய பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கூட்டத்தினரிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
- தேசம் விடுதலை பெற்று 70 வருடங்களாகியும், வேதாரண்யம் வந்துள்ள முதல் பிரதமர் நான்தான்
- இந்த கட்சி இல்லாவிட்டால் அந்த கட்சி என்று வாக்களித்தே ஏமாந்து போயுள்ளீர்கள். எனவேதான், திமுக-அதிமுக ஆகிய 2 கட்சிகளிடமிருந்து தமிழக மக்களுக்கு விடுதலை வாங்கித்தர வந்துள்ளேன்
- பாஜக ஆளும் மாநிலங்களிலுள்ள அரசுகளின் ஒரே மந்திரம் வளர்ச்சி என்பது மட்டுமே
- நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.. சொல்வீர்களா?
- தமிழகத்தில், கல்வி கூடம், அலுவலகம், வீடு எதிலாவது 24 மணிநேரமாவது மின்சாரம் வருகிறதா?
- பாஜக ஆளும் மாநிலங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் வந்து கொண்டுள்ளது
- சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்கள் ஆகிய பிறகும் சுத்தமான குடிநீர் உங்களுக்கு கிடைக்கவில்லை
- சுத்தமான குடிநீர் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்
- உங்கள் வளர்ச்சிக்காகத்தான் உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன்
- மக்கள் பங்களாவையும், பெரிய வாகனத்தையும் மக்கள் கேட்கவில்லை
- நல்ல பள்ளிக்கூடம், குடிநீர், மின்சாரம் இவற்றைதான் மக்கள் கேட்கிறார்கள்
- மீனவர்கள் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டுக்கொண்டுள்ளார்கள் என்பதை அறிவேன்
- எனது வாரணாசி தொகுதியில் மீனவர்களுக்கு இ-படகு திட்டம் கொண்டுவந்தேன்
- சூரிய ஒளி மூலம் அந்த படகுகள் இயக்குவதால் நாளுக்கு ரூ.500 மிச்சமாகிறது
- மீனவர்கள், பால் வியாபாரி, காய்கறி வியாபாரிகளுக்கு உதவவே முத்ரா திட்டம் கொண்டுவந்தேன்
- முத்ரா வங்கி திட்டம் மூலம் 3 கோடி மக்களுக்கு கேரண்டி இன்றி தலா ரூ.25 லட்சம் பணம் கடன் தரப்பட்டுள்ளது
- இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களை எனது தலைமையிலான மத்திய அரசு காப்பாற்றியது
- மரணதண்டனையை ரத்து செய்துவிட்டு சிறைக்குள்ளேயே அவர்களை வைத்திருக்க இலங்கை திட்டமிட்டது. ஆனால், நான் மரண தண்டனை ரத்து மட்டும்போதாது, அவர்களை விடுதலையும் செய்ய வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தினேன்
- இந்தியாவின் நெருக்கடியால்தான் இலங்கை அரசு 5 மீனவர்களையும் விடுதலை செய்தது. தூக்கு தண்டனைக்குள்ளான தமிழக மீனவர்களின் அப்பா, அம்மா ஸ்தானத்தில் இருந்து மீட்டேன்
- மத்திய அரசு தமிழக மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுத்துள்ளது. நீங்கள் சந்தோஷமாக இருந்தால்தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்
- இலங்கையால் விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களை பார்க்கும்போது உள்ளம் நெகிழ்கிறது. பாஜக அரசு அமைந்ததும் மீனவர்களுக்காக சாகர் மாலா திட்டம் கொண்டுவந்தேன்
- சாகர் மாலா திட்டத்தின்படி, வலைகள், மீன் பதனிடும் குடோன் வசதி செய்யப்பட்டுள்ளது
- இயற்கை பேரிடரின்போது விவசாயிகள், மீனவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படும்
- 50 வருட பழைய சட்டத்தை வைத்து இவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டது
- பாஜக அரசு பதவிக்கு வந்தபிறகு பழைய சட்டம் மாற்றியமைக்கப்பட்டது
- பாஜக அரசு அமைந்த பிறகு பிரதான் மந்திரி பசல் திட்டம் கொண்டுவந்துள்ளோம்
- விவசாயிகளை பாதுகாப்பது பிரதான் மந்திரி பசல் திட்டத்தின் நோக்கம்
- விவசாயிகள் பயிர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
- மழை, வெள்ளத்தால் பயிர் நஷ்டம் ஏற்பட்டால் மத்திய அரசு நிவர்த்தி செய்யும்
- 2022ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 வருடம் நிறைவடையும்
- அந்த காலகட்டத்திற்குள்ளாக விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக பெருக்க வேண்டும்
- ஈராக்கில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்ட பெருமையும் பாஜக அரசை சேரும்
- தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்
- தாலிபான்களால் கடத்தப்பட்ட யாருமே இதுவரை உயிரோடு வந்தது கிடையாது
- 9 மாதங்களாக மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து பத்திரமாக மீட்டோம்
- காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசில் தினமும் ஒரு ஊழல் நடந்தது
- 2ஜி, 3ஜி என அனைத்திலும் முந்தைய அரசு ஊழல் செய்தது
- 2ஜியில் கொள்ளையடித்தவர்கள் தமிழகத்தில் இன்னும் வலம் வருகிறார்கள்
- ஊழல் இருக்கும்வரை தமிழகம் வளராது
- ஊழல் இல்லாத அரசாங்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும்
- தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டுமானால் தாமரைக்கு வாக்களியுங்கள் தமிழகம் தலை நிமிர வேண்டுமானால் தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள். இவ்வாறு மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications