மோடியின் சென்னை கூட்டத்திற்கு விஜயகாந்த் வராதது ஏன்?: இது பாஜக சொல்லும் விளக்கம்
சென்னை: சென்னைப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜயகாந்த், நாளை சேலத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் மோடியுடன் பங்கேற்பார் என பாஜக தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். ஆனால், அப்பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சித் தலைவர்களான விஜயகாந்த், ராமதாஸ், வைகோ உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.
பாமக சார்பில் அன்புமணியும், தேமுதிக சார்பில் சந்திரகுமார் எம்.எல்.ஏவும் மட்டும் கலந்து கொண்டனர். பிரச்சாரம் நடந்த அன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் இருந்த விஜயகாந்தை மோடி சந்திக்கவில்லை, ஆனால் நடிகர் ரஜினிகாந்தை அவர் சந்தித்தார். இதனால் விஜயகாந்த மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது. கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டது.
காரணம், மோடியைப் பிரதமராக்க வேண்டும் என பிரச்சார கூட்டங்களில் தொடர்ந்து முழங்கி வருகிறார் விஜயகாந்த்.
இந்நிலையில், சேலத்தில் நாளை நடைபெற உள்ள பிரச்சாரக் கூட்டத்தில் மோடியுடன் விஜயகாந்த் பங்கேற்பதாக பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு கூறியதாவது:

உடம்பு சரியில்லை...
மோடி பிரச்சாரக் கூட்டத்தில் விஜயகாந்த பங்கேற்காததற்கு ஒரு காரணமும் இல்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாததைத் தவிர வேறு உள்நோக்கம் கிடையாது.

தேமுதிக வேட்பாளர்கள்...
அவருக்குப் பதிலாக தேமுதிக கொறடா சந்திரகுமார் எம்.எல்.ஏவும், வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர் தேமுதிக வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தொகுதி நிலவரம்...
திங்கட்கிழமை கூட விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோரிடம் தொகுதி நிலவரம் குறித்து பேசினோம்.

மோடியுடன் விஜயகாந்த்...
சேலத்தில் நாளை நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மோடியுடன் விஜயகாந்த் பங்கேற்கிறார். முடிந்தால் கோவைக் கூட்டத்திலும் பங்கேற்பதாக விஜயகாந்த் உறுதி அளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications