Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் மோடியின் செல்வாக்கு இவ்வளவுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் ஆளும் கட்சியாக இருந்தால் கூட மோடியின் செல்வாக்கை பயன்படுத்தி பாஜகவால் தமிழகத்தில் தங்களது கூட்டணியில் ஒரு முக்கியமான கட்சியைக் கூட சேர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது அக்கட்சியினருக்கு ஆறாத ரணமாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தேமுதிக, பாமக, மதிமுக, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து, 19 சதவீத வாக்குகளையும், இரு தொகுதிகளையும் வென்றது பாஜக கூட்டணி.

இந்த கூட்டணி காரணமாக வாக்குகள் சிதறியதால் திமுகவுக்குதான் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. திமுக கூட்டணி போட்டியிட்ட எந்த ஒரு தொகுதியிலும் அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை.

தேமுதிக, பாமக

தேமுதிக, பாமக

எனவே, சட்டசபை தேர்தலிலும், அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தனது கூட்டணியை முன்னெடுக்க ஆசைப்பட்டது. ஆனால், தேமுதிக, பாமக கட்சிகள் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை முதல்வர் வேட்பாளர்களாக அறிவித்துக் கொண்டதால் பாஜக கூட்டணி ஆசைக்கு குழி தோண்டப்பட்டது.

மக்கள் நல கூட்டணி

மக்கள் நல கூட்டணி

மதிமுக முன்கூட்டியே கழன்றுவிட்ட நிலையில், தேமுதிகவை எப்படியாவது இணைத்து, உதிரி கட்சிகளை சேர்த்துக்கொள்ள திட்டமிட்டது பாஜக. ஆனால் தேமுதிகவோ, மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்து பெப்பே காட்டிவிட்டது.

மேலிட உதவியோடு அதிமுகவுடன் ஐக்கியமாகிக் கொள்ளலாம் என்ற தமிழக பாஜகவினர் கனவையும் கார்டன் கலைத்துவிட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. மத்திய அமைச்சர்கள் vs மாநில அமைச்சர்களின் அறிக்கை போர் அதைத்தான் உணர்த்துகிறது.

உதிரி கட்சிகள்

உதிரி கட்சிகள்

உதிரி கட்சிகளை பிடித்து வைத்து தனி ஆவர்த்தனம் பாடலாம் என்று நினைத்தது பாஜக. எப்படியாவது தனது தலைமையில் ஒரு கூட்டணி இருப்பதாக காட்டிக்கொண்டால்தான் மரியாதை மிஞ்சும் என்பது அக்கட்சியின் தமிழ் மாநில நிர்வாகிகள் எண்ணம்.

சரத்குமார்

சரத்குமார்

இதனால்தான் ஐ.ஜே.கேவை இறுக்க பிடித்ததோடு, சமத்துவ மக்கள் கட்சியையும் கூட்டணியில் இணைத்தது. மத்திய அமைச்சர் ஜவேட்கரே முன் முயற்சி எடுத்து இவ்விரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்தார்.

ஓட்டம்பிடித்த சரத்

ஓட்டம்பிடித்த சரத்

ஆனால் விஜயகாந்த் தேமுதிகவில் இணைந்த தகவல் வெளியானதும் கூட்டணி கணக்கு மீண்டும் மாறியது. ஒரே ஓட்டமாக ஓடிப்போய் கார்டனில் ஐக்கியமாகிக் கொண்டார் சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார். ஒரே வாரத்தில் தட்டில் வைத்த லட்டு, தடுமாறி விழுந்த சோகத்தில் பாஜக சிக்கியது.

பாரிவேந்தரும் சந்தேகம்

பாரிவேந்தரும் சந்தேகம்

இப்போது பாரிவேந்தரின் ஐ.ஜே.கே கட்சியும் இருக்கவா, போகவா என்றுதான் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர் கட்சியும் வேறு கூட்டணியில் ஐக்கியமாக வாய்ப்புள்ளதையும் மறுப்பதற்கில்லை. மத்தியில் அதிகாரத்தில் உள்ள பாஜகவால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.

ஒருங்கிணைப்பு இல்லை

ஒருங்கிணைப்பு இல்லை

மக்களவை தேர்தலில் இணைந்திருந்த கட்சிகளை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டது தான் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம். லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு அவ்வப்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்துவது போன்ற என எந்த நடவடிக்கையிலும் பாஜக ஈடுபடவில்லை.

செல்வாக்கு இல்லையா

செல்வாக்கு இல்லையா

மேலும், சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை பெரிய கட்சிகள் அறிவித்ததன் காரணமாக, பாஜகவுக்கு சிக்கல் வந்தது. மோடியின் செல்வாக்கை கூட்டணி ஆதாயத்திற்கு பாஜகவால் பயன்படுத்த முடியவில்லை. சரியாக சொன்னால், மோடியின் செல்வாக்கு தமிழக கட்சிகளிடம் எடுபடவில்லை. இந்த விஷயத்தில் காங்கிரசிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், தமிழக பாஜகவினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+