பாஜக அலை, மோடி அலை ...எல்லாம் மாயை... தயாநிதி மாறன்
மதுரை: பாஜக கை ஓங்கியிருக்கிறது, நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்பதெல்லாம் மாயை. அப்படியெல்லாம் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
மதுரையில் நேற்று நடந்த திமுக பொதுக்குழு தீர்மான விளக்க கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் தயாநிதி மாறன்.
அவரது பேச்சு...

ஊடகங்களின் பிரசாரம்
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநிலங்களின் பேரவைத் தேர்தல் முடிவுகளை வைத்து பாஜகவின் கை ஓங்கிவிட்டதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் கைகூடிவிட்டதாகவும் ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன.

அப்படியெல்லாம் இல்லை
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொருத்தவரை காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வந்தன. மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ,காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது. சத்தீஸ்கர், நாட்டின் அரசியல் நிலையை நிர்ணயிக்கக் கூடிய மாநிலம் அல்ல.

டெல்லியைத்தான் பார்க்க வேண்டும்
டெல்லியின் தேர்தல் முடிவு மட்டுமே அனைவராலும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அங்கும் பாஜக, காங்கிரஸ் என இரு பிரதான கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

மோடி அலை என்பது பிரமை
இப்படியிருக்க, பாஜகவின் கை ஓங்கி இருக்கிறது, மோடி அலை வீசுகிறது என்ற ஊடகங்களின் பிரசாரம் வெறும் பிரமை மட்டுமே.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை
பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்காது. தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

மக்களுக்காக எதுவுமே இல்லை
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அதிமுக, மக்களுக்காக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மாறாக, மின் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்தியது.

மின்சாரம் வருவது போவதே தெரியவில்லை
திமுக ஆட்சியின்போது 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. ஆனால், இப்போது மின்சாரம் எப்போது வரும், போகும் என்றே தெரியாத நிலை இருக்கிறது. மக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டிய அரசு, அம்மா குடிநீர் என்ற பெயரில் விற்பனை செய்கிறது.

திமுக கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள்
மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவது திமுக மட்டுமே என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களவைத் தேர்தல்களில் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தபோதெல்லாம் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கிடைத்துள்ளன.

நிறையச் சொல்லலாம்
சேது சமுத்திரத் திட்டம், நான்கு வழிச் சாலைகள், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, ஜவுளி பூங்காக்கள், தொலைத் தொடர்பு வசதியில் புரட்சி என ஏராளமான திட்டங்களைச் சொல்ல முடியும்.

எதையுமே கூற முடியாது
அதிமுக அரசின் சாதனை என்று எதையும் கூற முடியாது. ஆகவே, வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார் மாறன்.
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications